Last Updated on July 18, 2022 by Dinesh
கள்ளக்குறிச்சி: பொய் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது..
நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் பள்ளியில் இறந்ததாக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது..

இந்த வன்முறையில் தனியார் பள்ளியின் வாகனங்கள் தீக்கிரையாக்கபட்டு பள்ளியையும் அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் காவல் துறையினரையும் தாக்கினார்கள்..
இதனால் பெரும் பதற்றத்துடனும், பரப்பபுடனும் காணப்பட்ட போராட்டகள பகுதியில் காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களால் நடத்தபட்ட வன்முறை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தமிழக காவல் துறையினர்..
மாணவி இறந்தது தொடர்பாக சம்பந்தபட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை கைது செய்து உள்ளனர்..
மேலும், நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை CCTV மற்றும் அப்பகுதியில் எடுக்கபட்ட வீடியோக்கள் மூலமாக கண்டறிந்து அவர்களை கைது செய்து பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.. .
இதனிடையே இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். .அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பது கள்ளக்குறிச்சி மாவட்டம்,
கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்பந்தமாக நள்ளிரவில் பள்ளியில் மர்மநபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது..
இந்த வீடியோ குறித்து விசாரணை செய்ததில் சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையம்,
சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிக்கணினியை திருட முயற்சி செய்த சம்பவம் தொடர்பான CCTV வீடியோ என்று விசாரணையில் தெரியவந்துள்ளது..
இந்த சம்பவத்தை வேறு விதமாக திசை திருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்தது போல் தொடர்புபடுத்தி பொய் செய்தியை மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பி வருகின்றனர்..
சட்டம் ஒலுங்கு,சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கபடும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. செல்வக்குமார் எச்சரித்துள்ளார்.