தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 697 பேர் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்…

கடந்த 24 மணிநேர நிலவரபடி தமிழகத்தில் சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 126 பேர் கொரோனா தொற்று பாதிப்பிற்க்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், இன்று கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளவர்களின் எண்ணிக்கையில் சென்னையில் அதிகபட்சமாக 131 பேர் நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்..
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நிலவரம்
கடந்த 24 மணி நேரப்படி தமிழகத்தின் அரியலூர் – 1, செங்கல்பட்டு – 43, சென்னை – 126, கோயம்பத்தூர் – 97, கடலூர் – 4, தர்மபுரி – 6, திண்டுக்கல் – 6,
ஈரோடு – 51, கள்ளக்குறிச்சி – 1, காஞ்சீபுரம் – 11, கன்னியாகுமாரி – 18, கரூர் – 15, கிருஷ்ணகிரி – 9, மதுரை – 4, நாமக்கல் – 35, நீலகிரி – 13 பெரம்பலூர் -1, புதுக்கோட்டை – 1,
ராமநாதபுரம் – 3, ரணிபேட் – 1, சேலம் – 33, சிவங்கை – 4, தஞ்சை – 14, தேனி – 1, திருபத்தூர் – 2 திருவள்ளூர் – 15, திருவண்ணாமலை – 6, திருவாரூர் – 2, தூத்துக்குடி – 3,
திருநெல்வேலி – 3, திருப்பூர் – 42, திருச்சி – 10, வேலூர் – 7, விழுப்புரம் – 5, விருதுநகர் – 3 ஆகிய மாவட்டங்களில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று பாதிக்காத மாவட்டங்களாக மயிலாடுதுறை – 0, நாகபட்டினம் – 0, தென்காசி – 0 ஆகிய மாவட்டங்கள் அறிவிக்கபட்டுள்ளன.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று புதியதாக உறுதி செய்யபட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்துள்ளனர்.
இவர்களில் கோயம்பத்தூர் – 2, கிருஷ்ணகிரி – 1, சேலம் – 1, திருப்பூர் – 1, நாகபட்டினம் – 1 என மொத்தம் 6 பேர் இன்று கொரோனா தொற்றிக்கு பலியாகியுள்ளனர்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவிற்க்கு 7,172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக கொரோனாவிற்க்கு 7,270 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 7,172 ஆக உள்ளது.