தின்பண்டத்திலும் தீண்டாமை சிறுவர்களுக்கு தின்பண்டம் தராமல் திருப்பி அனுப்பிய கடைக்காரர்

கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த பள்ளி பயிலும் சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்து திருப்பி அனுப்பி உள்ளார் கடையின் உரிமையாளர்..

தின்பண்டத்திலும் தீண்டாமை சிறுவர்களுக்கு தின்பண்டம் தராமல் திருப்பி அனுப்பிய கடைக்காரர்
thenkasi

தென்காசி மாவட்டம் சங்கரங்கோவில் அருகே பஞ்சாங்குளத்தில் மகேந்திரன் என்பவர் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த கடையில் அப்பகுதியில் வசிக்கும் பட்டியிலினத்தை சார்ந்த பள்ளி சிறுவர்கள் நான்கு பேர் பள்ளி செல்லும் பொழுது தின்பண்டம் வாங்க கடைக்கு வந்துள்ளனர்..

அப்போது அந்த கடையில் அமர்ந்து இருந்த கடையின் உரிமையாளர் மகேந்திரன் என்பவர் சிறுவர்களிடம் இனிமே இங்க தின்பண்டம் வாங்க வேண்டாம் என கூறியதுடன் உள்ளூர் கடைகளில் எங்கும் தின்பண்டம் வாங்க கூடாது என அந்த நபர் சிறுவர்களிடம் கூறுகிறார்..

மேலும், போய் உங்கள் வீட்டில் சொல்லுங்கள் தின்பண்டம் கொடுக்க மாட்டிங்கிறாங்கனு சொல்லுங்க என அந்த நபர் கூற அதற்க்கு சிறுவன் எதற்க்கு என கேள்வி எழுப்ப கடைக்காரர் தின்பண்டம் கொடுக்கமாட்டாங்க டா எங்க ஊர்ல கட்டுபாடு வந்து இருக்கு என கூறுகிறார்..

இதற்க்கு உடனே உலகம் அறியாத அந்த சின்னஞ்சிறு சிறுவன் கட்டுபாடா எதுக்கு என கேள்வி கேட்கிறான். ஆமா, ஊர்ல கூட்டம் போட்டு இருக்கு உங்க தெருவுல யாருக்கும்,

எதுவும் கொடுக்க கூடாதுணு சொல்லி என கடைக்காரர் சொல்ல வாடிய முகத்துடன் தின்பண்டம் வாங்க முடியாமல் அந்த பள்ளி சிறுவர்கள் கடையை விட்டு செல்கின்றனர்..

இதனை வீடியோவாக பதிவு செய்த சம்பந்தப்பட்ட கடைக்காரர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலரது கண்டனங்களை பெற்று காட்டு தீயாய் பரவியது..

இதனையடுத்து சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்து தீண்டாமை காட்டிய கடைக்காரர் மகேந்திரன், குமார், சுதா ஆகிய மூவரை போலீசார் கைது செய்து அவர்களது கடைக்கும் சீல் வைத்தனர்.

Exit mobile version