Last Updated on December 4, 2021 by Dinesh
கொரோனாவிற்க்கு 6 பேர் பலி 753 பேர் டிஸ்சார்ஜ் இன்றைய கொரோனா நிலவரம் குறித்த தகவல் பின்வருமாறு..

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் சிக்கிசை பெற்று வந்தவர்களில் 753 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யபட்டு வீடு திரும்பி உள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் கொரோனா பாதிப்பில் இருந்து 711 பேர் மீண்டு வீடு திரும்பியதை விட இன்றைய தினம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் என்பது நிம்மதியை தருகிறது.
நேற்று 8,098 பேர் தமிழகத்தில் கொரோனாவிற்க்கு சிக்கிசை பெற்றுவந்தனர். ஆனால் இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8,070 பேர் என குறைந்துள்ளது.
கொரோனாவிற்க்கு 6 பேர் பலி 753 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 1.06 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டதில் தற்போது வரை 8,070 பேர் கொரோனாவிற்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் கோய்ம்பத்தூர் – 1, ஈரோடு – 1, நாமக்கல் – 1, நீலகிரி – 1, சேலம் – 1, தஞ்சாவூர் – 1 என மொத்தம் 6 பேர் உயிர்ழந்து உள்ளனர்..
கடந்த 24 மணி நேர நிலவரப்படி தொடர்ந்து இரண்டாவது நாளாக தென்காசியில் கொரோனா தொற்று பாதிப்பு ‘0’ – என்ற நிலையில் உள்ளது.
மேலும் இன்று தமிழகத்தின் மாற்றும்மொரு மாவட்டமான ராமநாதபுரத்திலும் கொரோனா பாதிப்பு ‘0’ என்ற நிலை சற்று ஆறுதலை கொடுக்கிறது.
இருப்பினும் சென்னை மற்றும் கோயம்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்றைய தினத்தை விட இன்று கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாக காணபடுகிறது.
நேற்று சென்னையில் 128 பேருக்கு கொரோனா பாதித்து இருந்தது ஆனால் இன்று அதை விட சற்று அதிகமாக 136 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோயம்பத்தூரில் நேற்று 122 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று புதியதாக 130 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைய தினம் கொரோனா தொற்று ‘0’ என்று இருந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சியில் – 2 பேருக்கும், விருதுநகரில் – 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.