Last Updated on December 9, 2021 by Dinesh
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 15 பேர் உயிரிழப்பு மேலும் 746 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்..

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா தொற்றால் 15 பேர் உயிரிழந்தது மட்டுமின்றி புதியதாக 698 பேர் கொரோனா தொற்று பாத்திப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
ஒரே நாளில் சுமார் 1.02 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டன. இதை தொடர்ந்து தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7883 – ஆக உள்ளது.
மேலும், இன்று கொரோனா தொற்றால் சென்னையில் அதிகபட்சமாக 125 பேர் பாதிக்கபட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 91 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இன்றைய கொரோனா பாதிப்பில் இரண்டாம் நிலையில் கோயம்பத்தூரில் 112 பேர் பாதிக்கபட்ட நிலையில் 123 பேர் தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்புகள் அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ‘0’ என்ற நிலையில் உள்ளது.
மேலும், அரியலூரில் – 2, பெரம்பலூரில் – 2, தென்காசியில் – 1 என மூன்று மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
இந்த மூன்று மாவட்டங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ‘0’ என்ற நிலையில் உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 15 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு – 1, சென்னை – 1, கோயம்பத்தூர் – 2, ஈரோடு – 1, கரூர் – 1, கிருஷ்ணகிரி – 1, நாமக்கல் – 2, நீலகிரி – 1, திருவள்ளூர் – 1, திருவண்ணாமலை -1, திருப்பூர் – 2, திருச்சி – 1 என மொத்தம் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்து உள்ளார்கள்.
நேற்றைய கொரோனா பாதிப்பு 7,946 என இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தற்போது கொரோனாவிற்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7,883 பேர் குறைந்து காணபடுவது சற்று ஆறுதலை கொடுத்தாலும்.
கொரோனாவால் நேற்று உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 11 என இருந்தது. ஆனால் இன்று இறப்பு எண்ணிக்கையானது 15 ஆக உள்ளது.