நாளை மாவட்ட பள்ளி கல்லூரி என மொத்தம் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, பெரம்பலூர், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கபட்டன..
அதை தொடர்ந்து தற்போது இன்று முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரை தமிழகத்திற்க்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
தென் மேற்க்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்.
இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யும் எனவும்
தமிழகத்தின் மற்ற இதர மாவட்டங்ககளில் பெர்ம்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
நாளை மாவட்ட பள்ளி, கல்லூரி விடுமுறை
மேலும், கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் பெய்த மழையை விட நேற்று ஒரு நாள் மட்டும் பெய்த மழையின் அளவு தான் மிகவும் அதிகம் எனவும் வடகிழக்கு பருவ மழை மிக தீவிரமாக உள்ளது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு நாளை நவம்பர் 27 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை,
திருச்சி, பெரம்பலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, அரியலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை விடுமுறை அளிக்கபட்டுள்ளது.