Last Updated on May 28, 2021 by Dinesh
Vj Chithra-வின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யபட்டது..

நடிகை சித்ரா நேற்று காலை தனியார் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனை கண்ட அவரது ரசிகர்களும், சக நடிகர் நடிகைகளும் பேர் அதிர்ச்சியடைந்தனர்.
படபிடிப்பு வேலைகளுக்காக பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தனது கணவருடன் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அவருடன் தங்கி இருந்த கணவர் ஹேம்நாத்தை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்..
தமிழ் தொலைக்காட்சிகளில் விஜேவாக தனது பணியை ஆரம்பித்தார் நடிகை சித்ரா இவர் தற்போது தனியார் தொலைகாட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வந்தார்.
இத்தொடரின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது இத்தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சித்ரா.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த சித்ரா அவ்வ போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைபடத்திருக்கும் நிமிடத்தில் லட்சத்தில் லைக்குகளும், கமெண்ட்களும் வந்து குவியும்.
அவ்வ போது தனது ரசிகர்களிடம் நேரலையில் உரையாடியும் வந்தார் சின்னதிரை நடிகைகளில் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர் vj சித்ரா என்றாள் அது மிகையாகாது..
இவ்வாறாக துரு துரு வென எப்போதும் ஆக்டிவாக இருந்த vj chithra நேற்று காலைதிடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
vj chithu இறந்த செய்தியை கேட்டவுடன் அவரது ரசிகர்கள் நேற்று முதல் chithuvin புகைபடத்துடன் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்..
இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கும் அயலான்…
Vj Chithra-வின் உடல் பெசன்ட் நகரில் தகனம் செய்யபட்டது…
தனியார் ஹோட்டலில் நேற்று அவரது உடலை போலீசார் கைபற்றி பிரேதபரிசோதனைக்காக கீழ்பாக் அரசு மருதுவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதை தொடர்ந்து அவரது உடல் இன்று பிரேதபரிசோதனை செய்யபட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் வந்த பிரேதபரிசோதனை முடிவுவில் chithu தற்கொலை தான் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். மேலும் சித்ராவின் கன்னம் மற்றும் தாடைகளில் நக கீரல்கள் இருந்தன.
இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதன் அடிபடையில் நடிகை சித்ராவின் மரணம் மீது பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தது. இதற்கான பதில்கள் பிரேதபரிசோதனை மூலம் தான் உண்மை என்னவென்று தெரியவரும் என்றிருந்த சூழலில் தற்போது அதற்கான விடயம் கிடைத்துள்ளது.
மறைந்த நடிகை சித்ராவின் முகம் மற்றும் தாடையில் இருந்த அந்த நக கீரல்கள் சித்ராவுடையது தான் என பரிசோதனை முடிவில் வந்து இருப்பதாக தெரிவித்தனர்.
இருப்பினும் அவரது தற்கொலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? என போலீசார் தொடர்ந்து தீவிரமாக அவரது கணவரை விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் சித்ராவின் குடும்பத்தார் மற்றும் சக நடிகர், நடிகைகளை விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலத்திற்கு சின்னதிரை நடிகை, நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை தகனம் தகனம் செய்யபட்டது.