Last Updated on October 13, 2022 by Dinesh
சென்னையில் பட்டபகலில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

சென்னையில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து சத்யா (வயது 20) என்ற மாணவியை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (வயது 23) என்பவரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது..
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா மற்றும் கொலையாளி சதீஷ்க்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது பிளாட் பாரத்திற்க்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு சத்யாவை தள்ளி விட்டதில்
ரயிலில் மாட்டி மாணவி தலை துண்டாகி சம்பவ இடத்திலே உயிரிலந்தார். மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்..
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு வந்த ரயில்வே போலீஸார் தலை துண்டாகி இறந்து கிடந்த மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்..
இதையடுத்து மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த குற்றவாளி சதீஷை பிடிக்க உடனடியாக 7 தனிபடைகள் அமைக்கபட்டுள்ளது.
இதில் ரயில்வே போலீஸார் சார்பாக 4 தனிபடைகளும் பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிபடைகளும் அமைக்கப்பட்டு குற்றவாளி தீவிரமாக தேடபட்டு வருகிறார்..
பட்டபகலில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.