Last Updated on October 22, 2024 by Dinesh
இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 24, 2024 இல் மகாராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது..
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது..
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது..
இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில்முதலில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது..
முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது..
பின்னர், தனது முதல் இன்னிங்சை விளையாட ஆரம்பித்த நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி 402 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது..
முதல் இன்னிங்சில் தடுமாறிய இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் 462 ரன்களை அடித்தது..
இதனை தொடர்ந்து 107 ரன்களை டார்கெட்டாக கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்களை கொடுத்து 110 ரன்களை அடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது..
முதல் போட்டியிலே இந்திய அணி தோல்வியுற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் மீதமுள்ள இரண்டு போட்டிகளை வென்று இந்தியா கோப்பையை வெல்லும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை கிளப்பியுள்ளது..
இந்த நிலையில் இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 24 முதல் 28 ஆம் தேதி வரை மகாராஷ்ட்ராவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது..
மகாராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானம்
இந்த மைதானம் இது வரையில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் சாதகமான சூழலையே கொடுத்திருக்கிறது.
இந்தியா vs ஆஸ்திரிலிலேயா மற்றும் இந்தியா vs தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுடான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது..
கடந்த கால டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு இந்திய அணி சுழற் பந்து வீச்சாளர்கள் பங்கு மிக முக்கிய பங்கு வகித்துள்ளது..
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி
ரோஹித் ஷர்மா (கேப்டன் ), ஜஸ்பிரித் பும்ப்ரா, யஸ்ஷ்வி ஜெய்ஷ்வால், சிப்மேன் கில், விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான்,
ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்,
நியூசிலாந்து டெஸ்ட் அணி
டாம் லாதம் (கேப்டன் ), டாம் பிளன்டெல், மைக்கேல் பிரஸ்வேல், மார்க் சாப்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ’ரூக், அஜாஸ் பட்டேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சாட்னர், பென் சியர்ஷ், இஷ் சோதி, டிம் சௌதீ, கென் வில்லியம்சன், வில் யங்..
இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் கிர்க்கெட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்க இருக்கிறது..