Last Updated on June 2, 2021 by Dinesh
பஞ்சாப்பை வீழ்த்துமா சென்னை சூப்பர் கிங்ஸ் என ரசிகர்கள் இன்றைய போட்டியை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய மேட்ச் தற்போது துபாய்யில் ஆரம்பித்தது.
இந்த போட்டியானது நடப்பு தொடரில் 18-வது போட்டியில் அணிகளாக பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றது.
ஐபிஎல் சீசன் 13 புள்ளி பட்டியலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த அணியானது 4-போட்டிகளில் விளையாடி 1-இல் வெற்றி பெற்று 3-போட்டிகளில் தோல்வியை தழுவி 2-புள்ளிகளை பெற்றுள்ளது.
பஞ்சாப்பை வீழ்த்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்…
நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் சீசன் 13-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் பஞ்சாப் உடனான இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த புள்ளி பட்டியலில் முதன் முறையாக சென்னை அணி கடைசி இடமான 8 வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி கடைசி 3 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை தழுவியது இதன் காரணமாக 2 புள்ளிகளை மட்டும் பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது..
மும்பை vs ஹைத்ராபாத் இன்றைய போட்டியில்
சென்னை சூப்பர் கிங்ஸ் விட பஞ்சாப் அணி நெட் ரன் ரேட்டில் கூடுதலாக உள்ளது அதாவது +0.521 பெற்றுள்ளது சென்னை அணி -0.719 ரேட்டிங்கை மட்டும் பெற்றுள்ளது இதன் காரணமாகவே சென்னை அணி புள்ளி பட்டியலில் 8 வது இடத்தை பிடித்துள்ளது..
பஞ்சாப் vs சென்னை
டாஸை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் ஆட முடிவு செய்தது.
பஞ்சாப் அணியில் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால்,மந்தீப் சிங், நிக்லோயஸ் பூரான், கிளென் மக்ஸ்வெல்,சபரஜ் கான்,சிரிஸ் ஜோன், ரவிபிஷ்நோய் ,மொஹம்மத் சாமி, ஷெல்டன் கொற்றெல் ஹர்ப்ரீத் பிரர் ஆகியோர் இன்றைய போட்டியில் இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டியில் முதலாவதாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் நிதானமாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தனர்.
8 வது ஓவர் முதல் பந்தில் 19 பந்தில் 26 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார் அப்பொழுது அணியின் ஸ்கோர் 61க்கு 1,என்ற கணக்கில் இருந்தது.
பின்னர் களம் இறங்கிய வீரர்கள் மந்தீப் சிங்16 பந்துகளுக்கு 27 ரன்களும் மற்றும் நிக்கோலஸ் பூரான் 17 பந்துகளுக்கு 37 ரன்களும் எடுத்தனர்.
பஞ்சாப் அணியின் அதிககபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 52 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்..
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை அணியில் பந்து வீசிய தாகூர் 2 விக்கெட்களை கைபற்றினார் மேலும் ஜடேஜா மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட்களை கைபற்றினார்கள்..
பஞ்சாப்பை வீழ்த்துமா சென்னை சூப்பர் கிங்ஸ் என இன்றைய போட்டியின்இறுதியில் தெரியவரும். 20 ஓவருக்கு 178 ரன் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி. 179 ரன்கள் இலக்கை நோக்கி இப்பொழுது தனது ஆட்டத்தை ஆடி கொண்டிருக்கிறது.