natchathiram nagargiradhu: படத்தின் சூப்பரான அப்டேட் இதோ
Last Updated on August 6, 2022 by Dinesh
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு..

சார்பட்டா பரம்பரை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின் victim என்ற ஆந்தாலோஜி வெப் சீரிஸ் இயக்கியுள்ளார்..
இந்த சுவார்ஸ்யமான திர்ல்லர் வெப் சீரிஸில் victim கலையரசன், பிரசன்னா, அமலா பால், ப்ரியா பவானி ஷங்கர், நட்டி நடராஜன் உள்ளிட்ட பலர் இந்த சீரிஸில் நடித்துள்ளனர்..
நான்கு பாகங்களாக எடுக்கபட்டுள்ள இந்த வெப் சீரிஸில் dhammam பாகத்தினை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். நேற்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான victim வெப் சீரிஸில் ரஞ்சித் dhammanam பாகம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..
இதை தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் திரைபடம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் நடிகர் கலையரசன், துஷாரா, காளிதாஸ் ஜெயராமன், சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
யாழி பில்ம்ஸ் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் தென்மா இசையமைக்கிறார். மேலும் படத்திற்க்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார், எடிட்டர்ராக செல்வா ஆர் கே ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்..
இதனை தொடர்ந்து தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த அப்டேட் ஆனது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் பாடலாக ரங்கராட்டினம் என்ற பாடல் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடபடும் என அறிவித்துள்ளது..
இந்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் RangaRattinam என்ற ஹஸ்டாக் வைரலாகி வருகிறது.