Last Updated on March 24, 2022 by Dinesh
IPL 2022 :CSK கேப்டன் பதவியை துறந்தார் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் 2022 போட்டிகள் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய நிறுவனத்தால் நிறுவபட்ட ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் மே மாத இடைவெளிகளுக்குள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தன..
அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் முதல் சீசன் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை அணியுடன் சேர்த்து மொத்தம் எட்டு அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற்றது.. இந்த ஐபிஎல் போட்டிகள் இது வரை (2022) மொத்தம் 14 சீசன்களை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது..
இந்த 14 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி ரசிகர்களின் பேராதரவுடன் அசைக்க முடியாத கேப்டனாக இருந்து வந்தார்.
IPL 2022 :CSK கேப்டன் பதவியை துறந்தார் தோனி
ஆனால் தற்போது நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியதாகவும் போட்டியில் வீரராக பங்கு கொள்வார் எனவும் அறிவிப்புகள் வெளிவந்துள்ளது..
2022 -கிற்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் (26.3.2022) தேதி மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த முதல் போட்டியிலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சீசனின் முதல் போட்டியில் மோதுகின்றன..
இதற்கிடையில் வரும் 2022 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை அறிவித்துள்ளது.
மேலும், மகேந்திர சிங் தோனி அணியில் தொடர்ந்து வீரராக களமிறங்குவார் எனவும் நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்டுள்ளது..
ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் இந்த அறிவிப்பானது வெளியிடபட்டுள்ளது. இது வரையில் சென்னை அணியின் கேப்டனாக சிறந்து விளங்கிய,
கேப்டன் தோனி இந்த சீசன் முதல் கேப்டன் பதவியை துறந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியயும் அளித்துள்ளது..
இது குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.