Last Updated on April 6, 2025 by Dinesh
CSK vs DC 2025 | சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 15 வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கே அணியை வீழ்த்தி டெல்லி அசத்தல்…

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது..
IPL 2025 தொடரில் முதன் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன..
முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட தொடங்கியது..
டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ( Delhi Captials Team )
கே.எல். ராகுல் (கேப்டன் ), அசுதேஷ் சர்மா, அக்சர் பாப் – டூ பிளெசிஸ், ஹாரி புருக், விப்ராஜ் நிகம், அபிஷேக் போரேல், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ஷமிர் ரிஷ்வி,மோஹித் சர்மா,
குல்தீப் யாதவ், கருண் நாயர், டி. நடராஜன், முகேஷ் குமார், திரிபுராண விஜய், டொனோவன் பெரீரா, மாதவ் திவாரி, துஷ்மந்த் ஷிமீரா, தர்ஷன் நல்கண்டே, அஜய் மண்டல், மன்வந்த் குமார்
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து முதலில் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் மற்றும் கே. எல். ராகுல் களமிறக்கபட்டனர். சென்னை அணியின் சுழற் பந்து வீச்சாளர்
அஸ்வின் முதல் ஓவரை வீசிய போது டெல்லி அணியின் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் ரன்கள் ஏதும் அணிக்காமல் 5 பந்துகளை எதிர்கொண்டு டெக் அவுட் ஆனார்..
இதை தொடர்ந்து கே.எல். ராகுல் நிலைத்து நின்று ஆடி 51 பந்துகளில் 77 ரன்களை விளாசி டெல்லி அணிக்கு பலத்தை சேர்த்தார்.
பின்னர், களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் அபிஷேக் போரேல் 33 ரன்களும், சமீர் ரிழ்வி 20 ரன்களும், அக்சர் பட்டேல் 21, ட்ரிஸ்டன் ஸ்டெப்ஸ் 24 ரன்களை அடித்தனர்.
இறுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 183 ரன்களை பெற்றது..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 2025 ( Chennai Super Kings Team 2025 )
எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவிந்திரா, நூர் அகமது, மதிஷா பதிரானா ,ஜேமி ஓவெர்டன், டெவோன் கான்வே, ஆண்ட்ரே சித்தார்த், ரவிந்தீர ஜடேஜா, சிவம் துபே,
கலில் அகமது, ரவிசந்திரன் அஸ்வின், நாதன் எல்லிஸ், சாம் கரன், ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, வான்ஷ் பேடி, ராமகிருஷ்ண கோஷ், அன்சில் காம்போஜ், கமலேஷ் நாகர்பட்டி..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முதலில் களமிறங்கிய ரச்சின் ரவிந்திரா மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க,
அடுத்ததாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்த்து வெளியேறினார்..
பின்ன்ர், களமிறங்கிய விஜய் சங்கர் நிலைத்து நின்று 54 பந்துகளில் 69 ரன்களை பெற்று அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார்..
இதனிடையே, சிவம் துபே 18 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜாவும் வெறும் 2 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து களத்தை விட்டு வெளியேறினார்..
இவர்களை தொடர்ந்து, சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனி களத்தில் இறங்கி விஜய் ஷங்கருடன் ஜோடி சேர்ந்து ஆடினார்..
எம்.எஸ் தோனி மற்றும் விஜய் சங்கர் கூட்டணி சற்று ஆட்டத்தின் போக்கை மாற்றும்படியாக இருந்த போதிலும் 20 ஓவர்களில் சென்னை அணி 158 ரன்களை மட்டுமே பெற்றது..
டெல்லி கேபிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. கடைசியாக கட்ந்த 201 ஆம் ஆண்டில் சென்னையுடனான போட்டியில் வென்ற டெல்லி 15 ஆண்டுகளுக்கு பின் தற்போது விளையாடி போட்டியில் சென்னை அணியை டெல்லி வென்றது குரிபிடத்தக்கது