Jadeja-வுடன் CSK மோதலா என்ன நடந்தது?

Jadeja-வுடன் CSK மோதலா அப்படி என்ன நடந்தது இதற்கான முழு விவரத்தை பார்க்கலாம்..

Jadeja-வுடன் CSK மோதலா என்ன நடந்தது?
Ravindra Jadeja

தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐ‌பி‌எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளை எதிர்கொண்டு 7 போட்டிகளில் தோல்வியடைந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது..

ஐ‌பி‌எல் சீசன் 15-இன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யபட்டார்.

சென்னை அணியின் ஆல் ரவுண்டராக விளங்கிய ஜடேஜா அணியின் கேப்டனாக தேர்வு செய்யபட்டது

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபுறம் மஹிந்த்ர சிங் தோனியின் கேப்டன்ஷிப்பை மிஸ் செய்வதாக ரசிகர்கள் வருத்ததுடன் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்..

இதை தொடர்ந்து, நடப்பு ஐ‌பி‌எல் போட்டியில் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது..

இதனையடுத்து விளையாடிய போட்டிகளிலும் அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சி‌எஸ்‌கே-வின் தொடர் தோல்வி காரணமாக சோர்வுற்ற நிலையில் இருந்த ரசிகர்களுக்கு சென்னைக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடிய 22-வது ஐ‌பி‌எல் போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐ‌பி‌எல் போட்டியில் சென்னை அணியின் முதல் வெற்றி ரசிகர்களுக்கு மீண்டும் உற்சாகத்தை அளித்தது. இருப்பினும் சென்னை விளையாடிய அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது இதன் காரணமாக சி‌எஸ்‌கே-வின் கேப்டன் பதவிலிருந்து ஜடேஜா விலகி அந்த பொறுப்பை மீண்டும் தோனியிடம் வழங்கினார்..

இதை தொடர்ந்து தோனி தலைமையிலான சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து விளையாடி வந்தார்.

நடந்து முடிந்த ஐ‌பி‌எல் போட்டியின் 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின

இப்போட்டியின் ஜடேஜாவிற்க்கு காயம் ஏற்பட்டது இதன் காரணமாக சி‌எஸ்‌கே-வின் டெல்லி உடனான போட்டியில் இருந்து விலகினார்..

ஆனால், தற்போது சி‌எஸ்‌கே அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளது.

இது ஜடேஜாவின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதாக சி‌எஸ்‌கே அணி நிர்வாகம் தெரிவித்த நிலையில்,

தற்போது ஜடேஜா காயம் காரணமாக அணியில் இருந்து விலகவில்லை சென்னை அணியுடன் ஏற்ப்பட்ட மோதலால் தான் என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version