csk vs pbks: csk பந்து வீச்சில் 106 ரன்களில் சுருண்டது பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி…

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் 2021-கிற்கான 8 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது..
csk vs pbks: csk பந்து வீச்சில் சுருண்ட pbks அணி…
முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் ரன் ஏதும்மின்றி 2 பந்துகளை மற்றும் எதிர்கொண்டு அவுட் ஆனார்.
தொடர்ந்து ஆடி வந்த கே.எல். ராகுல் 7 பந்துகளில் 1 ஃபோர் உடன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களை அடுத்து களமிறங்கிய கிரிஷ் கயேல் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ஆடினர்.
ஆனால், இருவரும் தலா 10 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். இதில் கிரிஷ் கயேல் 10 பந்துகளில் 2 ஃபோர்களையும்,
தீபக் ஹூடா 15 பந்துகளில் 1 ஃபோர் அடித்து ஆட்டமிழந்தாதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இவர்களை தொடர்ந்து ஆட களமிறங்கிய வீரர்கள் அடுதடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷாருக் கான் 47 ரன்களை மட்டுமே அடித்தார்.
ஷாருக் கான் 36 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 4 ஃபோர்களில் 47 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இவரை தொடர்ந்து மேலும் களத்தில் இறங்கிய ஜ்யே ரிச்சர்ட்சன் 22 பந்துகளில் 2ஃபோர்களுடன் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்..
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 106 ரன்களுக்கு 8 விக்கெட்களை மட்டும் எடுத்து இருந்தது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சச்சார் 4 விக்கெட்களை கைபற்றினார்.
தீபக் சச்சார் 4 ஓவரில் 13 ரன்களை கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 1 மெய்டன் ஓவரையும் கொடுத்திருக்கிறார்.
அணியின் மற்ற வீரர்களான சாம் குர்ரன், மொயின் அலி, டவ்ய்னே பிராவோ, ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைபற்றியுள்ளனர்.
இந்த சீசனில் முதல் போட்டியிலே தோல்வி அடைந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து இருந்தனர். ஆனால், தற்போது விளையாடி வரும் 2 வது போட்டியில் சிஎஸ்கே வெற்றியை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்..
ஏனெனில் சென்னை அணியின் மிக சிறப்பான பந்து வீச்சால் பஞ்சாப் அணியை 106 ரன்களில் சுருட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சென்னை அணி எளிதில் இந்த இலக்கை எட்டிவிடும் என்ற ஆர்வத்துடன் போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
csk vs pbks: csk 20 ஓவருக்கு 107 ரன்களை இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.