dc vs csk 2021: இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன..
இன்று நடைபெறும் ஐபிஎல் சீசன் 14 – இன் முதல் சுற்று குவாலிஃபர் ஆட்டத்தில் (csk vs dc) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கியது.
துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து டெல்லி அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
dc vs csk 2021
இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிடல்ஸ் அணியின் சார்பாக முதலில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மூன்றாவது ஓவரில் 7 பந்துகளுக்கு 7 ரன்களை எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐய்யர் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்..
ஷ்ரேயாஸ் ஐய்யர் 8 பந்துகளில் 1 ரன்களிலும் அக்ஸர் பட்டேல் 11 பந்துகளில் 10 ரன்களில் தங்களது ஆட்டத்தை இழந்து வெளியேறினார்கள்.
டெல்லி அணியில் நிலைத்து ஆடிய பிரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோர்களை உயர்த்தினார்.
பின்னர் ரவீந்திர ஜடேஜா 10 வது ஓவரில்வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து டெல்லி அணியில் களமிறக்கபட்ட வீரர்கள் ரிஷப் பந்த் மற்றும் ஷிம்ரோன் ஹெட்ம்யர் ஆகியோர் டெல்லியின் விக்கெட் சரிவுகளில் இருந்து மீட்க நிலைத்து நின்று ஆடி ஆடினார்கள்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 35 பந்துகளில் 3 ஃபோர்கள் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து 51 ரன்களை கைபற்றினார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஷிம்ரோன் ஹெட்ம்யர் 24 பந்துகளை எதிர்கொண்டு 3 ஃபோர் மற்றும் 1சிக்சர் என அடித்து 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி வரை அவுட் ஆகாமல் நிலைத்து நின்று ஆடிய நின்று ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்து அரை சதம்
அடித்த நிலையில் டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 172 ரன்களை எடுத்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்களை எடுத்து உள்ளார்.
173 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு csk சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.
இப்போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக ஐபிஎல் சீசன் 14 -இன் இறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளதால் ஆட்டத்தின் விருவிருப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.
இந்த போட்டியில் தோற்கும் அணிக்கு மீண்டும் ஒரு போட்டி விளையாட கடைசி வாய்ப்புள்ளது என்பது குறிபிடத்தக்கது.