Last Updated on May 25, 2021 by Dinesh
ind vs eng 2nd odi: 336 ரன்கள் எடுத்து தனது அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளது இந்திய அணி.
இந்தியா, இங்கிலாந்து இடையே மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே முதல் போட்டி புனேவில் 23ஆம் தேதி நடைபெற்றது அதில் 66ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா அணி.
அதனை தொடர்ந்து, தற்போது இரண்டாவது ஒரு நாள் போட்டி மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் 50 ஓவர்களில் 336 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி வெற்றி பெற 336 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.
இதை தொடர்ந்து .இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்காக கொண்டு தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும்.
தொடரின் புள்ளி பட்டியலில் 1-1 என்ற கணக்கில் சம நிலை அடைய வாய்ப்புள்ளதால் இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற மும்முரத்தை காட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்திய அணியின் ரன்கள் விவரம்(ind vs eng 2nd odi live score):
இந்திய அணியில் முதலில் பேட்டிங் செய்ய ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ஷிகர் தவான் 17 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்றாவது ஓவர் கடைசி பந்தில் ரீச் டொப்ளேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய ரோஹித் ஷர்மா 25 பந்துகளில் 5 ஃபோர்களை அடித்து 25 ரன்களுக்கு சாம் குர்ரென்னிடம் எதிர்பாரா விதமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்களை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தனது அதிரடி ஆட்டதால் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் விராட் கோலி 79 பந்துகளில் 5 ஃபோர்கள் மற்றும் 1 சிக்சர் அடித்து 66 ரன்களை அடித்து ரஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய கே.எல் ராகுல் 114 பந்துகளில் 7 ஃபோர்கள் மற்றும் 2 சிக்சர்களுடன் சதம் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கே.எல்.ராகுல் 108 ரன்களில் டாம் குர்ரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இவரை தொடர்ந்து ஆடிய ரிஷப் பந்த் .தனது அதிரடி ஆட்டத்தால் 40 பந்துகளில் அரை சதத்தினை எட்டினார்.
இவர் 40 பந்துகளில் 3 ஃபோர்கள் மற்றும் 7 சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர், 77 ரன்களில் சதம் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தார்.
இவர்களை அடுத்து ஆடிய ஹர்டிக் பண்ட்யா 16 பந்துகளில் 1 ஃபோர் மற்றும் 4 சிக்சர்களில் 35 ரன்களை எடுத்து அவுட் ஆனார் . குர்நாள் பண்ட்யா 9 பந்துகளில் 12 ரன்ககளை எடுத்து இருந்தார்.
ind vs eng 2nd odi: இறுதியில் இந்திய அணி 50 ஓவருக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்து 336 ரன்களை எடுத்தது.. 337 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து தற்போது விளையாடி வருகிறது.