Last Updated on May 25, 2021 by Dinesh
ind vs eng 3rd odi: இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி யாருக்கு? என்பதில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கபடுகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையே 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்த முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மகராஷ்ட்ரியாவில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50ஓவருக்கு 336 ரன்களை குவித்தது.
இதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 337 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடியது.
இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தால் 43வது ஓவரிலே இலக்கை எளிதில் அடைந்து வெற்றி பெற்றது இங்கிலாந்து.
இதனால் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் சம நிலையை அடைந்தது.
இதனை தொடர்ந்து இந்தியா இங்கிலாந்துக்கு இடையே இன்று கடைசி ஒரு நாள் போட்டி மகராஷ்ட்ரியாவில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் தொடரை கைபற்றியநிலையில் தற்போது அதை போன்று ஒரு நாள் தொடரையும் இந்தியா கைபற்ற வேண்டும் இந்திய அணி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
ind vs eng 3rd odi: இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?
ஒரு நாள் தொடரை கைபற்ற தனது மும்முரமான ஆட்டதை இந்திய அணி வெளிபடுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவருக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் பேட்டிங் விவரம்:
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் சிகர் தவான் ஆகியோர் முதலில் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 37 பந்துகளில் 37 ரன்களுடன் 6 ஃபோர்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சிகார் தவான் 56 பந்துகளில் 10 ஃபோர்களுடன் 67 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரிஷப் பந்து களமிறங்கினர்.
கேப்டன் விராட் கோலி 10 பந்துகளில் 1 ஃபோர்யுடன் 7 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. பின்னர் ஆடிய ரிஷப் பந்து 62 பந்துகளில் 5ஃபோர் 4சிக்சர்களுடன் 78 ரன்களை குவித்தார்.
கடந்த போட்டியில் சதம் அடித்த கே.எல்.ராகுல் 7 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனது ரசிகர்களை கவலையடைய செய்தது. இருப்பினும் ஹார்டிக் பண்ட்ய 44 பந்துகளில் 5ஃபோர் 4சிக்சர்களுடன் 64 ரன்களை அடித்து அணியின் ஸ்கோர் உயர்வதற்க்கு காரணமாக இருந்தது.
இவர்களை தொடர்ந்து ஆடிய குர்நாள் பண்ட்யா 25 ரன்களும், ஷர்டுல் தாகூர் 1 ஃபோர் 3சிக்சர்களுடன் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்களை எடுத்தது.
ind vs eng 3rd odi: 330 ரன்களை இலக்காக கொண்டு தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.