Last Updated on July 30, 2021 by Dinesh
ind vs eng odi: முதல் போட்டிலே இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை விளையாட உள்ளது.
அதன் படி, கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்தியா உடனான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியானது சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இங்கிலாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியிலே அடித்து ஆட ஆரம்பித்து விட்டது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மல மலவென உயர்ந்தது..
ind vs eng odi: முதல் போட்டிலே இங்கிலாந்து அபார வெற்றி
பின்னர், முதல் இன்னிங்சை ஆட தொடங்கிய இங்கிலாந்து அதிரடியாக ஆடி 10 விக்கெட்களை பறிகொடுத்து 578 ரன்களை குவித்தது.
இதில், இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ரன்களை அடித்தார். அவர் 377 பந்துகளை எதிர்கொண்டு 19 ஃபோர் 2சிக்சர்களை அடித்து 218 ரன்னில் நடீம் வீசிய பந்தில் எல்பிடபில்யு ஆனார்.
இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 10விக்கெட்களை இழந்து 337 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது..
இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பாண்டே 88 பந்துகளில் 9ஃபோர்கள் மற்றும் 5சிக்சர்களை அடித்து 91 ரன்களை எடித்தார்.
பின்னர், இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கிய இங்கிலாந்து 178 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது.
அந்த அணியில் அதிபட்ச ரன் 32 பந்தில் 7ஃபோர்களுடன் ஜோ ரூட் 40 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அணியின் கேப்டன் அதிகபட்சமாக 104 பந்துகளில் 9ஃபோர்களுடன் 72 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்..
420 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 192 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்ததால். இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியிலே இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெரும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ind vs eng odi: இதனையடுத்து இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 13 தொடங்க இருக்கிறது.
அப்போட்டியானது 13-இல் தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது இந்த போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் 13-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் 28 வரையிலும் நான்காவது டெஸ்ட் தொடர் மார்ச் மாதம் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது