Last Updated on November 3, 2024 by Dinesh
IND vs NZ : இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது..
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது..
முதல் போட்டியில் மிக மோசமான விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி தற்போது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என கட்டாயத்தில் விளையாடி வருகிறது..
IND vs NZ Highlights
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் கடந்த அக்டோபர் 24,2024 ஆம் ஆண்டு காலை 9.30 மணியளவில் தொடங்கியது..
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி சுமார் 79 ஓவர்களை எதிக்கொண்டு ஆடியது..
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மேட்ச்சின் முதல் இன்னிங்சில் 259 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது..
அதிகபட்சமாக ரச்சின் ரவிந்த்ரா 105 பந்துகளில் 65 ரன்களை அடித்து நியூசிலாந்து அணிக்கு பலத்தை கூட்டினார்..
இந்நிலையில் இந்தியா கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது..
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 9 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன் ஏதும் அடிக்காமல் டக்அவுட் ஆனார்..
பின்னர், அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களை அடித்து களத்தை விட்டு வெளியேறினர்..
இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 38 ரன்களை சேர்த்து நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்..
முதல் இன்னிங்சின் இறுதியில் இந்திய அணி 156 ரன்களுக்கு அத்தனை விக்கெட்களையும் இழந்தது..
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கிய நியூசிலாந்து அணி 198 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்துள்ளது..
இரண்டாம் நாள் ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்து 301 ரன்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது..
கேப்டன் டாம் லாதம் நிதானமாக ஆடி 133 பந்துகளுக்கு 89 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி இருக்கிறார்..
இந்திய அணியின் சார்பாக பந்து வீசிய ரவிசந்திரன் அஸ்வின் 17 ஓவர்களை வீசி அதிகபட்சமாக 64 ரன்களுக்கு 1 விக்கெட்டை எடுத்துள்ளார்..
இவரை தொடர்ந்து ஜஸ்பிரிட் பும்ப்ரா 6 ஓவர்களுக்கு 25 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை கைபற்றியுள்ளார்..
மேலும், வாஷிங்டன் சுந்தர் 19 ஓவர்களுக்கு 56 ரன்களை கொடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா 11 ஓவர்களில் 50 ரன்களை கொடுத்துள்ளார் இவர்கள் இருவருமே விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிபிடத்தக்கது..
தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது இந்தியா நியூசிலாந்து மேட்ச் இரண்டு அணிகளுக்குமே வெற்றி பெற்றாவதில் கட்டாயம் இருப்பதால் ஆட்டத்தின் விருவிருப்புக்கு பஞ்சம் இருக்காது..
மேலும் பல தகவல்களை உடனுகுடன் தெரிந்து கொள்ள இப்போதே எங்களின் ..Twitter, Instagram, Facebook சமூக ஊடக பக்கங்களை பின்பற்ற தொடங்குங்கள்..