Last Updated on October 11, 2022 by Dinesh
இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது..
மூன்று ஒரு நாள் போட்டிகளை விளையாடுவதற்காக இந்தியா வந்த தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி இந்தியாவுடனான தனது முதல் ஒரு நாள் போட்டியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய தென்னாபிரிக்கா களமிறங்கி 40 ஓவருக்கு 249 ரன்களை விளாசியது..
250 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 40 ஓவரில் 240 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் தென்னாபிரிக்கா அணி தனது முதல் போட்டியிலே 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
3 போட்டிகளை மட்டுமே ஒரு நாள் தொடரில் இந்தியா முதல் போட்டியில் தோற்றதின் காரணமாக இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் நிலவியது..
இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியா தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றது.
அதிரடியாக விளையாடிய இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 282 ரன்களை எடுத்தது..
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவருக்கு 278 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை சமன் செய்தது..
Ind vs Sa 3rd odi series
இன்று இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் தொடர் டெல்லியில் தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது..
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் jenneman malan மற்றும் quinton de kock ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க
அணியின் கேப்டன் டேவிட் மில்லர் 8 பந்துகளில் 7 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்..
தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக heinrich klaasen 42 பந்துகளில் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 27 ஓவரில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது..
100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் shubman gill மற்றும் shreyas iyer ஆகியோர் ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பாதையை எளிதில் அடைந்தது..
shubman gill 57 பந்துகளில் 49 ரன்களுக்கு ஆட்டமிழக்க shreyas iyer 23 பந்துகளுக்கு 28 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின் கேப்டன் shikhar dhawan 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்..
இறுதியில் இந்திய அணி 19-வது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 105 ரன்களை பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஒரு நாள் தொடரை கைப்பற்றியது..
இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 18 ரன்களை கொடுத்து 4 விக்கெட்களை எடுத்த இந்திய அணியின் வீரர் kuldeep yadav விற்க்கு player of the match விருதும்,
17 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை எடுத்த இந்திய அணி வீரரான mohammed siraj -வுக்கு player of the series விருதும் வழங்கபட்டது.