ind vs sl t20 – நாளைய போட்டியில் வெல்வது யார்?

ind vs sl t20 – போட்டி நாளை இந்தியா மற்றும் இலங்கை இடையே இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.

ind vs sl t20 - நாளைய போட்டியில் வெல்வது யார்?
ind vs sl odi

நேற்று இந்தியா மற்றும் இலங்கை இடையே முதல் டி20 போட்டி பிரமாட ஸ்டேடியமில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் வீரர் பிரித்வி ஷா தனது முதல் பந்திலே விக்கெட்டை பறிகொடுத்தார்.

இவர் இலங்கை அணியின் டுஷ்மந்தா சமீரா வீசிய பந்தில் மிவோத் பானுகாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்..

இவரை தொடர்ந்து ஆடிய ஷிகார் தவான் 36 பந்துகளில் 46 ரன்களை பெற்று 4 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து ஆட்டம் இழந்தார்.

சஞ்சு சம்ஸோன் 20 பந்துகளில் 27 ரன்களை எடுத்து 2ஃபோர், 1 சிக்ஸ் உடன் எல்‌பி‌டபில்யு ஆனார்.

மேலும் இவர்களை தொடர்ந்து இந்திய அணியின் சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். இவர் 34 பந்துகளில் 50 ரன்களை பெற்றதுடன் 5ஃபோர், 2சிக்சர்களை அடித்து அணிக்கு ரன் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஹார்டிக் பாண்டியா 12பந்துகளில் 10 ரன்னும், இஷான் கிஷான் 14 பந்துகளில் 1ஃபோர், 1சிக்ஸ் என அடித்து 20 ரன்களை மட்டுமே அணிக்கு பெற்று தந்தனர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்து 5 விக்கெட்களை இழந்தது. இலங்கை அணி சார்பில் பந்து வீசிய டுஷ்மந்த்ரா சமீரா, வாணிந்து ஹசாரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைபற்றினர். சாமிகா கருணாட்டே 1 விக்கெட்டை எடுத்தார்.

இதனை தொடர்ந்து இலங்கை அணி 165 ரன்களை இலக்காக கொண்டு விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கதிலே மினோத் பானுகா 7 பந்துகளில் 2ஃபோர்களை அடித்து 10 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தார்.

பின்னர் இரண்டாவது விக்கெட்டாக தனஞ்சயன் டே சில்வா 9 பந்துகளில் 1ஃபோர் அடித்து 10ரன்னில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டாக அவிஷ்கா பெர்னாண்டோ 23பந்துகளில் 3ஃபோர்களை அடித்து வெறும் 26 ரன்களை பெற்றார்.

இவர்களை தொடர்ந்து இலங்கை அணியின் சாரித் அசலாங்க அதிகபட்சமாக 26 பந்துகளில் 44 ரன்களுடன் 3 ஃபோர் மற்றும் 3 சிக்சர்களை அடித்தார்.

பின்னர் ஆடிய இலங்கை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 126 ரன் மட்டுமே எடுத்து 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது.

ind vs sl t20 – news in tamil

இதனால் இந்திய அணி இலங்கை அணியுடனான தனது முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

மூன்று t20 போட்டிகள் (ind vs sl odi series) தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தற்போது 3-க்கு 1-என்ற கணக்கின் மூலம் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

ஆகவே, நாளை நடைபெறும் இரண்டாவது t20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால் தொடரை கைபற்றிவிடும் என்பதால் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆகையால், நாளை நடைபெறும் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மட்டுமே போட்டியை சமன் செய்ய முடியும். \

ஆதலால் நாளை நடைபெறும் போட்டி விருவிருப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கபடுகிறது.

இரு அணிகளும்(ind vs sl odi) மோதிக்கொள்ளும் போட்டி நாளை இரவு 8.00 மணிக்கு இலங்கையில் உள்ள பிரமாட ஸ்டேடியமில் நடைபெற உள்ளது.

Exit mobile version