Last Updated on August 18, 2022 by Dinesh
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டிகளில் முதல் போட்டி இன்று ஜிம்பாப்வே மைதானத்தில் நடைபெற்றது..
zim vs ind அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 18 2022) ஜிம்பாப்வேவில் அமைந்துள்ள harare sports club மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் சுமார் 1.00 மணி அளவில் இரு அணிகளுக்கு இடையயான போட்டி தொடங்கியது..
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது..
இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய ஜிம்பாப்வே அணியின் துவக்க ஆட்டக்கார்களான இன்னொஸெண்ட் கையா மற்றும் டாடிவானஷே மருமானி ஆகியோர் களமிறங்கினர்..
ஆட்டத்தின் துவக்கத்திலே இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறிய ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்கள் இன்னொஸெண்ட் கையா 4(20) ரன்களும் டாடிவானஷே மருமானி 8 (22) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்..
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்த சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ரெஜிஸ் சகப்வா சற்று நிலைத்து நின்று நிதானமாக ஆடியதில் அவர் 35 (51) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்..
இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் மற்ற வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல்
அரை சதம் கூட அடிக்க முடியாமல் மிக குறைந்த ரன்களிலே ஆட்டத்தை இழந்தனர்..
கடைசியாக ஜிம்பாப்வே அணி (40.3) தங்களது அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்களில் சுருண்டனர்..
50 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்கார்களான ஷிகர் தவான் மற்றும் ஷிப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தின் துவக்கத்திலே அதிரடி காட்டினர்..
இருவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி (30.5) ஓவரிலே மிக எளிதாக வெற்றி இலக்கை எட்டியது..
ஷிகர் தவான் 81 ( 113 ) ரன்களும் ஷிப்மன் கில் 82 ( 72) ரன்களும் அடித்ததில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது..
இதை தொடர்ந்து இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் சனிக்கிழமை ( 20Aug ) மதியம் 12.45 மணியளவில் தொடங்கவுள்ளது.