Last Updated on November 25, 2021 by Dinesh
ind vs nz test முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை குவித்துள்ளது…
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது.
இதில், முதலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் நடந்து முடிந்தன.
அதில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் 3 போட்டிகளிலுமே வென்று அசத்தியது.
அதனை தொடர்ந்து, தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூர் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் காலை 9.30 மணியளவில் தொடங்கியது.
ind vs nz test
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட முடிவு செய்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்,
முதல் டெஸ்ட், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய இந்திய அணியில் இருந்து மயங்க் அகர்வால் மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
இந்திய அணி 7.5 ஓவரில் 21 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் அணியின் முதல் விக்கெட்டாக மயங்க் அகர்வால் 28 பந்துகளுக்கு 13 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
மயங்க் அகர்வால் விக்கெட்டை தொடர்ந்து பூஜாரா களமிறக்கபட்டார். ஷூப்மன் கில் மற்றும் பூஜாரா ஆகியோரது ஜோடி அரை சதத்தை எட்டியது.
பின்னர் ஷூப்மன் கில் அணியின் இரண்டாவது விக்கெட்டாக 93 பந்துகளில் 52 ரன்களை பெற்று ஆட்டமிழந்தார்.
ஷூப்மன் கில் விக்கெட்டிற்க்கு பிறகு களமிறங்கிய அஜீங்க்யா ரகானே, பூஜாராவுடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.
நிதானமாக ஆடிய இந்த ஜோடி 37 வது ஓவரில் 88 பந்துகளில் 28 ரன்களை மட்டும் எடுத்து பூஜாரா ஆட்டத்தை இழந்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய அஜீங்க்யா ரகானே 63 பந்துகளில் 35 ரன்களை எடுத்து அவுட் ஆகினார். அப்போது இந்திய அணி 49.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 145 ரன்களை எடுத்து இருந்தது.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐய்யர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது கூட்டணி நிலைத்து நின்று ஆடியது.
இதில் ஷ்ரேயாஸ் ஐய்யர் 136 பந்துகளில் 75 ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா 100 பந்துகளில் 50 ரன்களும் எடுத்த நிலையில் இன்றைய முதல் இன்னிங்ஸ் ஆட்டம் நிறைவு பெற்றது.
முதல் இன்னிங்ஸ் போட்டியில் விளையாடுவதற்க்கு மீதும் 6 ஓவர்கள் இருக்கும் நிலையில் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லா காரணத்தால் இன்றைய முதல் இன்னிங்ஸ் போட்டி முன்னதாகவே முடிக்க வைக்கபட்டது.
இறுதியில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 84 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 258 ரன்களை குவித்து உள்ளது.
இன்றைய ஆட்டத்தின் இறுதியில் ஷ்ரேயாஸ் ஐய்யர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இவர்களது ஜோடி நாளை தொடங்கும் இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்து விளையாட உள்ளது.