ind vs nz day3 ஆம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 296 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது…
நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் நாள், முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை எடுத்து இருந்தது.
அதை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 345 ரன்களை கைபற்றியது.
முதல் இன்னிங்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐய்யர் 171 பந்துகளை எதிர்கொண்டு 105 ரன்களை எடுத்து இருந்தார்.
ind vs nz day3
இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் நாளே அதிரடியாக ஆடிய நியூசிலாந்து 129 ரன்களை எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் இருந்தது.
நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகியோரது ஜோடி நிலைத்து நின்று ஆடியது.
இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் டாம் லாதம் மற்றும் வில் யங் ஜோடி 151 ரன்களை அணிக்கு பெற்று தந்தது.
இவர்களை தொடர்ந்து களத்தில் இறங்கிய அணியின் கேப்டன் கானே வில்லியம்சன் மற்றும் ராஸ் டைலர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணி ஆட்டத்தின் துவக்கத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தனர்.
இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவிசந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டையும் அக்ஸர் பட்டேல் 5 விக்கெட்களையும் கைபற்றியதன் காரணமாக நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 296 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது..
இதன் மூலம் தற்போது இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று தனது இரண்டாவது இன்னிங்சை கான்பூர் மைதானத்தில் இன்று தொடங்கியது..
முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணியில் இருந்து மயங்க் அகர்வால் மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் களமிறக்கபட்டனர்.
இதில், ஆட்டத்தின் முதல் ஓவரிலே ஷூப்மன் கில் 1 ரன் மட்டும் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் கிய்லே ஜேமிசன் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்..
ஷூப்மன் கில் விக்கெட்டை தொடர்ந்து மயங்க் அகர்வாளுடன் ஜோடி சேர்ந்து ஆட பூஜாரா களமிறக்கபட்டார்.
இவர்களில் மயங்க் அகர்வால் 13 பந்துகளுக்கு 4 ரன்களும் பூஜாரா 14 பந்துகளுக்கு 9 ரன்களும் எடுத்து நிலையில் இன்றைய ஆட்ட நேரம் முடித்து வைக்கபட்டது.
இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 5 ஓவர்களுக்கு 14 விக்கெட்டை இழந்து 14 ரன்களை எடுத்து உள்ளது..
மேலும், இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர் ஷூப்மன் கில் விக்கெட்டை கைபற்றிய வீச்சாளர் கிய்லே ஜேமிசனுக்கு இது 50 வது விக்கெட்டாகும்.
இதன் மூலம் கிய்லே ஜேமிசன் நியூஸீலாந்து அணியில் அதிவேகமாக 50 விக்கெட்களை கைபற்றியவர் என்ற பெருமையும் இன்றைய போட்டியில் நடைபெற்றது.