Last Updated on April 13, 2022 by Dinesh
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதித்தது..
நேற்று மும்பையில் ஐபிஎல் போட்டியின் 22-வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி இரவு 7.30pm மணிக்கு தொடங்கியது..
இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் களமிறங்கினர்..
ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் ஆட்டமிழக்க இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ராபின் உத்தப்பா 50 பந்துகளில் 88 ரன்களை விளாசினார்.
இவர் 50 பந்துகளில் 4 ஃபோர் மற்றும் 9 சிக்சர்களை மைதானத்தில் பறக்கவிட்டார்..
ராபின் உத்தப்பா சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் வனிந்து ஹசரங்க 18.5 -வது ஓவரை வீசிய பந்தை எதிர்கொண்ட பொது எதிர்பாராவிதமாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்..
இவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக சிவம் துபேவை களமிறக்கியது சிஎஸ்கே அணி. களத்தில் இறங்கியதில் இருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார் சிவம் துபே.
46 பந்துகளில் 95 ரன்களை அடித்து நேற்றைய ஆட்டத்தை அதிர வைத்தார் சிஎஸ்கே அணியின் சிவம் துபே. இவர் 46 பந்துகளில் 5 ஃபோர்கள் 8 சிக்சர்கள் என தெறிக்கவிட்டார் நேற்றைய ஆட்டத்தின்,
சிஎஸ்கேவின் நம்பிக்கை நாயகனாக விளங்கிய சிவம் துபே கடைசி வரை நிலைத்து நின்று ஆடினாலும் சதம் அடிக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை கொடுத்தது..
csk கேப்டன் ரவீந்திர ஜடேஜா ரன்கள் ஏதும் அடிக்காமல் டெக் அவுட் ஆனார். இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவரில் 4 விக்கெட்களுக்கு 216 ரன்களை குவித்தது…
இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணியின் வீரர்கள் அடுத்தடுத்து மிக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்கள்..
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்களை பறிகொடுத்து 196 ரன்களை மட்டுமே பெற்று தோல்வியுற்றது.
CSK வெற்றிக்கு பின் ஜடேஜா சொன்னது இதான்
சிஎஸ்கேவின் இந்த வெற்றி நடப்பு ஐபிஎல் 15 சீசனில் இதுவே முதல் வெற்றியாகும் எனவே இந்த வெற்றியை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த முதல் வெற்றிக்கு பின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் கூறியதாவது.
தொடர் தோல்வி காரணமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுத்ததில்லை. மேலும் எனக்கு ஆதரவாக எப்போதும் தோனி உள்ளார்.
தற்போது கிடைத்திருக்கும் வெற்றி கேப்டனாக எனக்கு கிடைத்த முதல் வெற்றி இந்த வெற்றியை எனது மனைவிக்கு அற்பணிக்கிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.