IPL வரலாற்றில் இப்படி ஒரு போட்டியா? என நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள்…
நடந்து வரும் ஐபிஎல் சீசன் 14 -இன் கடைசி லீக் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணிகள் ஆகிய மோதின.
ஐபிஎல் பட்டியல் ஆறாவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்க்கு நேற்றைய போட்டியில் கடுமகையாக போராடியது.
நேற்று MI vs SRH அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் சூர்யக்குமார் யாதவ் ஆகியோர் களத்தில் வெளுத்து வாங்கினார்கள். இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 235 ரன்களை குவித்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி வீரர்கள் மும்பை அணிக்கு நாங்கள் ஒன்றும் சளித்தவர்கள் இல்லை என்பதை காட்டும் விதமாக திருப்பி அடிக்க தொடங்கினார்கள்.
கடைசியில் ஆட்டம் முடிவுக்கு வரும் பொழுது சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி 20 ஓவருக்கு 193 ரன்களை கைபற்றி தோற்றது..
இந்த போட்டி இரு அணிகளுக்கும் இந்த சீசனில் கடைசி போட்டி என்பதினால் நேற்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
எப்படியாவது போட்டியில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை அணி நுழைந்திடம் என்று மும்பை அணி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நெட் ரன் ரேட் மும்பை அணிக்கு கை கொடுக்கவில்லை.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனை விட்டு நேற்றைய போட்டியோடு வெளியேறியது..
இது ஒருபுறம் இருக்க மற்றும் ஒரு போட்டி நேற்றைய தினம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போட்டியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தான் அது..
DC vs RCB 2021
இந்த இரு அணிகளும் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்றைய போட்டி இவர்களின் மீதமுள்ள கடைசி லீக் போட்டிகள் நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது டெல்லி அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள்.
பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் ஆட்டத்தால் டெல்லி அணி 20 ஓவருக்கு 5 விக்கெட்களை இழந்து 164 ரன்களை எடுத்தது.
165 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ராயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள்.
கேப்டன் விராட் கோலி 4 ரன்களிலும் டெவ்டுட்ட் படிக்கல் ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து ஆடிய சிகர் பாரத் மற்றும் கெளேன் மேக்ஸ்வெல்ல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி வீரர் சிகர் பாரத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.
IPL வரலாற்றில் இப்படி ஒரு போட்டியா? ரசிகர்கள் ஷாக்…
நேற்று நடைபெற்ற போட்டிகளில் சுவாரஸ்யம் என்ன வென்றால் (two ipl matches at same time) IPL வரலாற்றில் முதன் முறையாக நேற்றைய போட்டிகள் ஒரே நாள், ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நேரடி ஒளிப்பரப்பாகியது.
இதற்க்கு முன் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம் தான் ஆனால் அவை நடைபெறும் நேரம் வெவ்வேறு நேரங்களில் அமைந்திருக்கும்.
அதாவது ஒரே நாளில் நடக்கும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டி மதியம் 3.30க்கு ஆரம்பித்து மாலை 7.00மணிக்கு முடிவடையும்.
மீண்டும் இரண்டாவது போட்டி மாலை 7.00 தொடங்கி இரவு 11.00மணி வரை நடைபெறும். ஆனால் நேற்று நடைபெற்ற MI vs SRH, மற்றும் DC vs RCB ஆகிய அணிகளின் போட்டியானது.
நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த புதிய முயற்சி ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.