Last Updated on July 30, 2021 by Dinesh
KKRvsKXIP: அசத்தல் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை தோற்கடித்தது.
இன்றைய ஐபிஎல் சீசன் 13 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இப்போட்டியானது இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு ஆரம்பித்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த இரு அணிகள் மோதி கொள்ளும் போட்டியானது நடப்பு ஐபிஎல் தொடரில் 24 வது போட்டியாகும்..
KKRvsKXIP: அசத்தல் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ்
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தினால் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி செல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் விருவிருப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதபடுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்(KKR Team)
கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையில் ராகுல் திரிபாதி, ஷூப்மன் கில், நரினே ராணா, மோர்கன், ஆண்ட்ரூ ரஸ்ஸல், கம்மின்ஸ், சுனில் நரினே, கம்லேஷ் நாகற்கொடி, வருண் சக்ரவர்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இன்றைய போட்டியில் இடம் பெற்றுள்ளனர்.
முதலில் களமிறங்கிய ராகுல் திரிபாதி 10 பந்துகளில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார் பின்னர் ஆடிய நரினே ராணா 4 பந்துகளுக்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
மூன்றாவது விக்கெட்டாக மோர்கன் 23 பந்துகளுக்கு 24 ரன்காலை எடுத்து ஆட்டமிழந்தார்.
IPL2020 CSKvsKKR :சென்னை மற்றும் கொல்கத்தா
இதை தொடர்ந்து ஷூப்மன் கில் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்து விளையாடி அணிக்கு ரன் சேர்த்தனர்..
ஷூப்மன் கில் 47 பந்துகளில் 57 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 29 பந்துகளுக்கு 58 ரன்களை குவித்தார்.
இறுதியில் பஞ்சாப் அணிக்கு 6 விக்கெட்களை இழந்து 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்(KXIP Team)
கேப்டன் கே.எல் ராகுல் தலைமையில் மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரான், பிரப்சிம்ரன் சிங், மக்ஸ்வெல், மந்தீப் சிங், ஜோர்டான், முஜீப் உர் ரஹ்மான், ரவி பிஷ்நோய் மொஹம்மத் சமி, அர்ஷ்டீப் சிங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
பஞ்சாப் அணி சார்பாக முதலில் களமிறங்கி ஆடிய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் அதிகபட்ச ரன்களை எடுத்தனர்.
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 58 பந்துகளுக்கு 74 ரன் களை எடுத்தார் இவரை தொடர்ந்து மயங்க் அகர்வால் 39 பந்துகளில் 56 ரன்களை எடுத்தார்..
பின்னர் ஆடிய நிக்கோலஸ் பூரான் 10 பந்துகளுக்கு 16 ரன்களையும் மக்ஸ்வெல் 5 பந்துகளுக்கு 10 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதை தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை பறிகொடுத்து 162 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது..
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்த் வெற்றியின் மூலம் தரவரிசை பட்டியலில் 3-ஆம் இடத்திற்கு சென்றது.