Last Updated on October 29, 2022 by Dinesh
ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் நியூசிலாந்த் மற்றும் இலங்கை அணிகள் மோதின..
டி20 உலக கோப்பையில் தகுதி சுற்று 12-இல் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தகுதி சுற்றில் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெரும் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகிறது..
இதில் மொத்தமுள்ள 45 போட்டிகளில் இன்று 27-வது போட்டி நியூசிலாந்த் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த இரு அணிகள் மோதும் போட்டியானது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் தொடங்கியது..
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட தொடங்கியது..
நியூசிலாந்த் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களமிறங்கினர்..
இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்த் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வேவும் அடுத்தடுத்து 1 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்..
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்த் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 13 பந்துகளில் 8 ரன்களை அடித்து ஆட்டத்தை இழந்தார்.
நியூசிலாந்த் அணியின் மோசமான ஆட்டத்திலிருந்து மீட்க கிளென் பிலிப்ஸ் களமிறக்கபட்டார்..
அதிரடியாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாளா புறமும் சிதறடித்து 64 பந்துகளில் 104 ரன்களை விளாசி தள்ளினார்.
பின்னர் 104 ரன்களில் கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்கையில் அணியின் மற்றொரு வீரர் டேரில் மிட்செல் 24 பந்துகளில் 22 ரன்களை எடுத்தது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்தது..
20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 167 ரன்களை பெற்றிருந்தது. 168 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஸ்ஸாங்கா 5 பந்துகளில் 0 ரன்களில் டெக் அவுட் ஆனார்..
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய குசல் மென்டிஸ் 3 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்..
மேலும் இலங்கை அணியில் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்..
இலங்கை அணியில் அதிகபட்சமாக பானுக்கா ராஜபக்சே 34 (22), டாசுன் சனாக்கா 35 (32) ரன்களை எடுத்தனர். இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன்களை மட்டுமே பெற்றது..
இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.