நியூசிலாந்த் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணி

நியூசிலாந்த் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரை இறுதி சுற்று போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது..

icc t20 world cup
nz vs pak

ஐ‌சி‌சி ஆண்கள் டி20 2022-க்கிற்கான உலக கோப்பைக்கான சூப்பர் 12 தகுதி சுற்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று முடிவடைந்தது.

சூப்பர் 12 சுற்றில் மொத்தம் நான்கு அணிகள் வெற்றி பெற்று அரை இறுதி சுற்று தகுதி பெற்றன..

ஐ‌சி‌சி டி20 உலக கோப்பை அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதி போட்டிக்குள் நுழைந்தன..

இதில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரை இறுதி போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட முடிவு செய்தது..

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்ட்காரர் ஃபின் ஆலன் வெறும் 4 ரன்னில் எல்‌பி‌டபில்யு ஆகியது நியூசிலாந்து அணியின் தொடக்கத்திற்க்கு சருக்கலாக அமைந்தது..

இவரை தொடர்ந்து, களமிறங்கிய மற்ற வீரர்கள் நிறுத்தி நிதானமாக ஆடி அணிக்கு ரன் சேர்க்க முற்பட்டனர். இருப்பினும் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 152 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது..

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டர்ய்ல் மிட்செல் 53 (35), டெவோன் கன்வே 21 (20), அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 46 (42) எடுத்து அரை சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தார்..

153 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மொஹம்மத் ரிஸ்வான் மற்றும் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் அடித்து ஆட தொடங்கினர்..

ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் கூட்டணி சதம் அடித்த நிலையில் கேப்டன் பாபர் அசாம் 53(42) எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ரிஸ்வான் 57 (43) எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்..

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மொஹம்மத் ஹாரிஸ் 30 ரன்களை விளாச பாகிஸ்தான் அணி எளிதில் இலக்கை எட்டி வெற்றியை நோக்கி நகர்ந்தது..

இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தானின் இந்த வெற்றி மூலம் 3-வது முறையாக ஐ‌சி‌சி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்குள் சென்றுள்ளது..

நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரை இறுதி போட்டி நடைபெறுகிறது.

Exit mobile version