Last Updated on April 8, 2022 by Dinesh
PBKS vs GT : கடும் போட்டியில் இன்றைய ஆட்டம் காரசாரமான ஆட்டமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது..
IPL 2022 – போட்டியில் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தற்போது நடைபெறவிருக்கும் போட்டியானது ஐபிஎல் 2022-இன் 16-வது போட்டியாகும்..
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜ்ராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளில் தற்போது முன்னிலை வகிப்பது குஜ்ராத் டைட்டன்ஸ் தான்.
( ipl score board) நேற்று வரையில் நடந்து முடிந்த போட்டிகளின் அடிபடையில் ஐபிஎல் 2022 தரவரிசை பட்டியலில் டைட்டன்ஸ் அணி பட்டியலில் 4-வது பிடித்துள்ளது..
டைட்டன்ஸ் அணியுடன் மோதும் பஞ்சாப் கிங்ஸ் இதற்க்கு அடுத்தபடியாக தரவரிசை பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி இது வரை 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 4 ஆம் இடத்தை தக்க வைத்துள்ளது..
பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதற்க்கு சற்றும் குறையாமல் இது வரை 3 போட்டிகளை எதிர்கொண்டு அதில் 2 -இல் வெற்றி பெற்று 1 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் 8-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை அசால்ட்டாக வீழ்த்தியது..
இந்த போட்டியின் தோல்வியின் காரணமாக தற்போது பஞ்சாப் அணி தரவரிசை பட்டியலில் 3-க்கு 2 என்ற கணக்கில் 5 ஆம் இடத்தில் உள்ளது..
மாலை குஜ்ராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்றால் பஞ்சாப் அணி தரவரிசை பட்டியலில் 5 ஆம் இடத்திலிருந்து 4 ஆம் இடத்திற்க்கு முன்னேற வாய்ப்புள்ளது..
ஆனால், குஜ்ராத் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று நெட் ரன் ரேட்டில் அதிக புள்ளிகளை பெற்று உள்ளது. டைட்டன்ஸ் அணியின் நெட் ரன் ரேட் ( +0.495) புள்ளிகளுடன் களத்தில் உள்ளது..
பஞ்சாப் அணி தற்போது நெட் ரன் ரேட்டில் ( +0.238 ) புள்ளிகளை வைத்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், குஜ்ராத்தை டைட்டன்ஸ் அணியை வெல்வது மட்டுமின்றி நெட் ரன் ரேட்டில் கூடுதலாக பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது..
டைட்டன்ஸ் அணியை வென்று பஞ்சாப் அணி தரவரிசை பட்டியலில் முன்னேற கூடுதலாக ( +0.257 ) புள்ளிகள் தேவைபடுகிறது…. ஆகையால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் கடுமையான போட்டியாக நடக்க உள்ளது.
நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்று பட்டியலில் முன்னேறி 4 ஆம் இடத்தை பிடிக்குமா ? அல்லது டைட்டன்ஸ் அணி போட்டியில் வென்று தனது இடத்தை தக்க வைத்து கொள்ளுமா? என்பது இன்றைய காரசார ஆட்டத்தில் தெரிந்துவிடும்.