Last Updated on April 9, 2022 by Dinesh
CSK vs SRH Live : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணிகள் விளையாடி வருகின்றனர்..
நடப்பு ஐபிஎல் 17 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணிகள் மோதும் போட்டி மும்பை மதியம் 3.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது..
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் விளையாட சென்னை சூப்பர் அணியினர் ராபின் உத்தப்பா மற்றும் ருட்டுராஜ் கைவாட் ஆகியோர் களமிறக்கபட்டனர்..
ஆட்டம் துவங்கபட்டு 3-வது ஓவர் நடைபெற்றிருந்த வேலையில் சென்னை அணியின் ராபின் உத்தப்பா 11 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து தன் ஆட்டத்தை இழந்தார்..
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ருட்டுராஜ் கைவாட் 5-வது ஓவர் முதல் பந்தில் 13 பந்துகளுக்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்த இருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சென்னை துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து மிக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தால் அணியின் ஸ்கோர் (5.1)இல் 36 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலை காணபட்டது..
யாக்கர் கிங் என்றழைக்கபடும் நடராஜ் ஆட்டத்தின் 3 ஓவர் முதல் பந்தை வீசினார் அப்போது அந்த பந்தை எதிர்கொண்ட,
சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஓவரான ருட்டுராஜ் கைவாட் பந்து எட்ஜில் பட்டு மிடில் ஸ்டெம்பை பறக்கவிட்டுள்ளது.
பந்து வீச்சாளர் நடராஜ் சென்னையின் அணியின் ஆட்டக்காரர் ருட்டுராஜ் கைக்வாட்டை க்ளீன் போல்ட் ஆக்கிய இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
இதனை தொடர்ந்து சென்னை அணியில் அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயரித்தினர்.
இவர்களில் மொயின் அலி 35 பந்துகளுக்கு 48 ரன்களை எடுத்த போது எதிர்பாராவிதமாக கேட்ச் கொடுத்து ஆட்டத்தை இழந்தார்..
மொயின் அலி அரை சதம் விளாசுவார் என்று சென்னை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் திடீரென தனது விக்கெட்டை இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது..
இவர்களை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளுக்கு 23 ரன்களும் மகேந்திர சிங் தோனி 6 பந்துகளுக்கு 3 ரன்களும் எடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினர்..
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்களுக்கு 154 ரன்களை எடுத்து உள்ளது.
155 ரன்களை இலக்காக கொண்டு சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி தற்போது விளையாடி வருகிறது.