Last Updated on April 9, 2022 by Dinesh
பரபரப்பான ஆட்டத்தில் CSK மீண்டும் தோல்வியடைந்து இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
ஐபிஎல் போட்டிகளின் 17 மற்றும் 18-வது போட்டிகள் இன்று ஒரே நாளில் நடைபெறுகின்றன. இதில் ஒரு அணியாக IPL-இன் 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணிகள் மதியம் 3.30 மணிக்கு மும்பையில் தொடங்கியது..
இதில் டாஸ் வென்ற சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனை தொடர்ந்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டத்திலே அதன் முதல் இரண்டு வீரர்.கள் அடுத்தடுத்து குறைந்த ரன்களில் அவுட் ஆகி ஆட்டத்தை விட்டு வெளியேறினார்கள்.
இவர்களை அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் ஆட்டக்காரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் அணியின் ஸ்கோர் குறைந்தே காணபட்டது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா 23 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டத்தை இழந்தார்.
இவரை தொடர்ந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட தோனி 6 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்..
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்க்கு 7 விக்கெட் இழப்பிற்க்கு 154 ரன்களை எடுத்து இருந்தது. இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்,
களமிறங்கிய சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினார்கள்.
சன் ரைசஸ் அணியின் அபிஷேக் சர்மாவின் 50 பந்துகளில் 5 ஃபோர், 3 சிக்சர்கள் என விளாசி அணிக்கு 75 ரன்களை பெற்று தந்தார். பின்னர் இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கேன் வில்லியம்சன் 40 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதியின் அதிரடி ஆட்டத்தால் ஹைத்ராபாத் அணியின் வெற்றி இலக்கை எளிதில் எட்டியது. ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 5 ஃபோர், 2 சிக்சர்களை அடித்து 39 ரன்களை எடுத்தார்..
இறுதியில் அபிஷேக் ஷர்மா மற்றும் ராகுல் திரிபாதியின் அதிரடி ஆட்டத்தால் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2022 இல் இது வரை நான்கு போட்டிகளை விளையாடியுள்ளது. தற்போது விளையாடிய போட்டியுடன் சேர்த்து தொடர்ந்து,
நான்காவது முறையாக தோல்வி அடைந்து இருப்பது சென்னை ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.