MI vs SRH 2021: பிளே ஆஃப் செல்லுமா மும்பை

MI vs SRH 2021 : இன்று நடைபெறும் போட்டியில் சன் ரைசஸ் ஹைத்ராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

MI vs SRH 2021: பிளே ஆஃப் செல்லுமா மும்பை
SRH vs MI

தற்போது நடைபெற்று வரும் ஐ‌பி‌எல் சீசன் 14 -இல் 55 வது போட்டியில் சன் ரைசஸ் ஹைத்ராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன.

இந்த போட்டியானது இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு ஷெய்க் ஜாயேத் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடைபெற்று வந்த ஐ‌பி‌எல் லீக் ஆட்டங்களில் இன்று இரு அணிகளுக்கும் கடைசி லீக் ஆட்டங்களாகும்.

சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் இது வரை 13 ஆட்டங்களை இந்த அணி விளையாடியுள்ளது. அதில் மூன்று முறை மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

மீதமுள்ள 10 ஆட்டங்களிலும் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி தோல்வியை தழுவி உள்ளது.. இன்று விளையாட போகும் போட்டியானது ஐ‌பி‌எல் சீசன் 14 -இல் சன் ரைசஸ் ஹைத்ராபாத்துக்கு கடைசி லீக் ஆட்டம்..

MI vs SRH 2021

இந்த கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்த சீசனை பொறுத்தவரை இந்த இரண்டு அணிகளும் தற்போது இரண்டாவது முறையாக மோதுகின்றது.

கடந்த லீக் போட்டிகளில் 9 வது போட்டியில் விளையாடிய இந்த அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணியை வீழ்த்தியது..

இதை தொடர்ந்து இந்த போட்டியானது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லீக்கின் ஆட்டமாகும். ஆனால், மும்பை அணி 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பிளே ஆஃப்பின் விளிம்பு நிலைக்கு சென்றது..

இதை அடுத்து மும்பை கடைசி இரண்டு போட்டிகளில் அதிக ரன்கள் வித்திசாயாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு இருந்தது..

ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்களில் அபார வெற்றி பெற்றதை அடுத்து கொல்கத்தா அணியின் என்‌ஆர்‌ஆர் விகிதம் கூடியது.

சரி, இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்பதினை பார்போம்.

புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி நெட் ரேட் படி +0.587 -ஐ பெற்று நான்காவது இடத்தை பிடித்து கிட்டதட்ட பிளே ஆஃப்க்கு உறுதி செய்யபட்ட நிலையில் உள்ளது.

ஆனால், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கடும் சவால்கள் நிறைந்துள்ளன. அதாவது சன் ரைசஸ் அணி ஒரு ஓவர்க்கு ஒரு ரன் அடித்தல் மும்பை அணி ஒரு ஓவருக்கு 20 ரன்களை அடிக்க வேண்டிய சூல்நிலையில் உள்ளது..

ஏனெனில் தற்போது -0.048 – ஐ பெற்று ஆறாம் இடத்தில் இருப்பதால் மும்பை அணிக்கு பட்டியலில் முன்னேற இன்னும் 0.+588 நெட் ரேட் பெற வேண்டும். இது ஒரே மேட்ச்சில் எடுப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல.

MI vs RR 2021 : பிளே ஆஃப்பில் நுழைய போவது

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தால் 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும்.

இந்த பெரிய இலக்குடன் 170 அல்லது அதற்க்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்..

இந்த கடுமையான சவாலை மும்பை அணி எதிர்கொள்ளுமா ? சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி மும்பை அணியை பழி வாங்குமா என்பதினை இன்றைய பரபரப்பான ஆட்டத்தில் தெரிந்து விடும்.

Exit mobile version