csk vs pbks 2021 : சென்னை அணி தொடர் தோல்வி

csk vs pbks 2021: இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி தோல்வி..

csk vs pbks 2021 : சென்னை அணி தொடர் தோல்வி
csk vs pbks

நடப்பு ஐ‌பி‌எல் சீசன் 14 -இன் 53 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 3.30 மணியளவில் தொடங்கியது.

துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. ஆனால் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

csk vs pbks 2021

இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாஃப் டு பிளசிஸ் களமிறங்கினர்.

ஆட்டத்தின் துவக்கத்திலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக ருதுராஜ் கெய்க்வாட் 14 பந்துகளில் 1 ஃபோர் மட்டும் அடித்து 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 6 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் அடிக்காமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணியின் ஸ்கோர் 29 க்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஓவர்களுக்குள் 2 விக்கெட்களை இழந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பாஃப் டு பிளசிஸ் களத்தில் நிலைத்து நின்று ஆடினார்.

மொயின் அலி விக்கெட்டுக்கு பிறகு ராபின் உத்தப்பா மற்றும் அம்பதி ராயுடு அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் தோனி 15 பந்துகளில் 2 ஃபோர்களை 12 ரன்களில் ஆட்டமிழந்தார்..

அப்போது சென்னை அணி 11ஓவர் முடிவில் 61-க்கு 5 விக்கெட்களை பறிகொடுத்தது. இறுதியில் சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 15 ரன் உடனும் பிராவோ 2 பந்துகளில் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கடைசியாக 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்தது 134 ரணகளை எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள்.

கே. எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் கூட்டணி 4 ஓவர் வரை நிலைத்து நின்று ஆடியது. 4 வது ஓவர் 3 வது பந்தில் ஷர்டுல் தாக்கூர் வீசிய பந்தில் எல்‌பி‌டபில்யு ஆனார் பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால்..

இவரை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே. ராகுல் மற்றும் நிலைத்து நின்று ஆடி 42 பந்துகளில் 7 ஃபோர் மற்றும் 8 சிக்சர்களை விளாசினார்.

கே. எல் ராகுலின் இந்த அதிரடி ஆட்டத்தால் 13 ஓவர்களிலே மிக எளிதாக இலக்கை எட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ipl 2021 playoff

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி அந்த அணி.யின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் தகுதியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றின் மூலம் பஞ்சாப் 12 புள்ளிகளை பெற்ற ஐந்தாம் இடத்தில் உள்ளது.

8 புள்ளிகள் பெற்று பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது தொடர் மூன்றாவது தோல்வி என்றாலும்.

ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த தோல்வி சென்னை அணிக்கு பாதிப்பு ஏதும் இல்லை.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 98 ரன்களை பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே. எல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.

csk vs pbks: csk பந்து வீச்சில் சுருண்ட pbks அணி…

நடைபெற்ற போட்டியில் கே. எல் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 98 ரன் வரை அடித்து சதம் அடிக்க முடியாமல் போனதால் பஞ்சாப் அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Exit mobile version