Last Updated on September 25, 2021 by Dinesh
pbks vs srh 2021: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் இன்று ஷார்ஜா மைதானத்தில் மோதுகின்றன…
இன்று நடைபெறும் ஐபிஎல் சீசன் 14 இல் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது.
இந்த இரு அணிகள் தற்போது மோதும் போட்டி நடப்பு ஐபிஎல் போட்டிகளில் 37 வது தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் தற்போது விளையாடி வருகிறது.
pbks vs srh 2021
தற்போது நடைபெற்று வரும் போட்டியில் இரு அணிகளின் கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் போடபட்டது.
அப்போது டாசில் வென்ற சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது..
இதை அடுத்து முதலில் விளையாட களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் அணியின் கேப்டன் கே எல் ராகுல் ஆகியோர் விளையாட தொடங்கினர்.
முதலில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் 21 பந்துகளில் 3 ஃபோர்களை அடித்து 21 ரன்களை பெற்று 4 வது ஓவர் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய மற்றுமொரு வீரரான மயங்க் அகர்வால் 6 பந்துகளில் வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இவர்களை தொடர்ந்து மூன்றாவதாக கிறிஸ் கெய்லே ஐடேன் மார்க்ராம் ஆகியோர் களத்தில் விளையாட தொடங்கினர்.
இதில் கிறிஸ் கெய்லே 10 வது ஓவரில் 17 பந்துகளுக்கு 1 ஃபோர் உடன் 14 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டத்தை இழந்தார்.
பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்லேவுடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஐடேன் மார்க்ராம் 14 வது ஓவரில் 32 பந்துகளை எதிர் கொண்டு 2 ஃபோர்களுடன் 27 ரன்களை அடித்து அவுட் ஆனார்..
அணியின் மற்ற வீரர்களான தீபக் ஹூடா 10 பந்துகளில் 1 ஃபோர் உடன் 13 ரன்களை அணிக்கு சேர்த்தார்.
மேலும் ஹர்ப்ரீத் பிரார் 18 பந்துகளில் 1 ஃபோர் அடித்து 18 ரன்களில் ஆட்டத்தை பறிகொடுத்தார்..
பஞ்சாப் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 20 ஓவருக்கு 7 விக்கெட்களை பறிகொடுத்து 125 ரன்களில் சுருண்டது..
சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணியில் பந்து வீசிய சந்தீப் சர்மா, புவனேஷ் குமார், ரஷீத் கான், அப்துல் சாமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 19 ரன்களை கொடுத்து 3 விக்கெட்களை கைபற்றியுள்ளார்..
இதனை அடுத்து சன் ரைசஸ் ஹைதராபாத் அணி 126 ரன்களை இலக்காக கொண்டு தற்போது விளையாடி வருகிறது…today ipl match DC vsRR ராஜஸ்தானுக்கு 155 இலக்கு
126 என்கிற எளிதான இலக்காக இருப்பதால் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லுமா என்பதினை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். dc vs rr 2021: அசத்தலான வெற்றி பெற்ற டெல்லி