தமிழகத்தில் கடந்த 24 மணிநேர கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

தமிழகத்தில் கடந்த 24 மணிநேர கொரோனா
covid-19

கடந்த 24மணி நேரத்தில் தமிழகத்தை பொறுத்த வரை 711 பேரு கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 759 பேர் தொற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டு வீடு திரும்பினார்கள்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1.02 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில் தற்போது 8,098 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேர கொரோனா நிலவரம்

கடந்த 24 மணி நேரப்படி கொரோனா தொற்றினால் பாத்திக்கபட்டவர்களின் எண்ணிக்கை அடிபடையில் இன்று முதலாவதாக சென்னையில் 128 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் 122 பேர் தொற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதை தொடர்ந்து இரண்டாவதாக கோயம்பத்தூரில் இன்று 127 பேர் தொற்றினால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 111 பேர் தொற்று குணமடைந்து இன்று வீடு திரும்பினார்கள்.

கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தின் கள்ளக்குறுச்சி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றினால் யாரும் பாதிக்கபடவில்லை.

மேலும் கள்ளக்குறுச்சியில் 7 பேரும், தென்காசியில் -1, விருதுநகரில் – 3 பேரும் இன்று கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இன்று சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த 759 பேர் நலம் பெற்று இன்று வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் சென்னை -1, கோயம்பத்தூர் – 1, காஞ்சிபுரம் – 1, நீலகிரி – 1, சேலம் – 3, திருவாரூர் – 1, தூத்துக்குடி – 1 ஆகிய மாவாட்டங்களில் இன்று தொற்றினால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க முக கவசம் அணிதல், கட்டாயம் தனிமனித இடைவெளி கடைபிடித்தல், வெளியே சென்று வீட்டிற்க்குல் வந்தவுடன் கைகளை நன்றாக கழுவுதல்,

போன்ற கொரோனா தடுப்பு பாதுகாப்பு அம்சங்களை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிபிடத்தக்கது.

Exit mobile version