Telegram: டெலிகிராமில் இத்தனை வசதிகள் இருக்கா?

Telegram: டெலிகிராமில் இத்தனை வசதிகள் இருக்கா? என்பதனை இதில் முழுமையாக பார்ப்போம்…

Telegram: டெலிகிராமில் இத்தனை வசதிகள் இருக்கா?
telegram

வாட்ஸ் அப்பை போன்று மற்றுமொரு செயலி தான் டெலிகிராம் இந்த செயலியானது வாட்ஸ் ஆப் காட்டிலும் சில தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது. இது வாட்ஸ் அப்புக்கு நேரடி போட்டியாகவே கருதபடுகிறது.

ஏனெனில் இந்தியாவில் மட்டும் டெலிகிராம் செயலியை 50 கோடிக்கும் அதிகமானோர் கூகிள் பிளே ஸ்டோரின் மூலம் டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலி மொபைல் மற்றும் கம்ப்யூட்டரிலும் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. இதனை நீங்கள் கூகுளின் பிளே ஸ்டோரின் மூலம் பதிவிறக்கம்.

Telegram: டெலிகிராமில் இத்தனை வசதிகள் இருக்கா?

செய்த பின் வாட்ஸ் ஆப் போலவே உங்களுடைய 10 இலக்க என்னை டயல் செய்ததும் உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணின் மூலம் உறுதி செய்த பின் டெலிகிராம் உள்ளே நுழையும்..

டெலிகிராம் குரூப் சிறப்பு அம்சம் (telegram group)

வாட்ஸ் அப்பை பொறுத்த வரை நீங்கள் ஒரு குரூப்பில் 250 பேர் வரை தான் சேர்க்க முடியும். ஆனால் டெலிகிராமை பொறுத்த வரை உங்களால் 2 லட்சம் நபர்கள் வரை குரூப்பில் சேர்த்து கொள்ள முடியும்.

மேலும் டெலிகிராம் குரூப்பில் சில தொழில் நுட்பங்கள் அடங்கியுள்ளன. இதில் உங்களால் உங்கள் டெலிகிராம் குரூப்பில் உள்ளவர்களின் தொலை பேசி என்னை காண முடியாது.

அதாவது, உங்களிடம் ஒரு நண்பரின் தொலை பேசி எண் இல்லையென்றாலும் அந்த நண்பர் நீங்கள் இருக்கும்

வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்தால் அவரின் தொலை பேசி எண்ணை உங்களால் எளிதில் காண முடியும்..

ஆனால் டெலிகிராம் குரூப் பொறுத்த வரை அவ்வாறு மற்றவர்களின் தொலை பேசி எண்ணை மற்றவர்களால் காண முடியாதவாரு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் இருக்கும் குரூப்பின் அட்மினால் கூட உங்கள் தொலை பேசி எண்ணை பார்க்க முடியாதவாறு தொழில்நுட்ப திறனுடன் உருவாக்கபட்டுள்ளது..

இதனால் ஒருவரின் அனுமதி இல்லாமல் அவர்களின் தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ளும் வாய்ப்பு முடக்கபடுகிறது. இந்த செயல் முறை ஒருவரது தொலைபேசி எண்ணை பாதுகாக்கும் அம்சமாக இருப்பதால் பயனாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் நம்பர் குரூப்பில் இருப்பவரிடம் இருந்தால் கூட குரூப்பில் உங்களின் நம்பரை அவரால் காண முடியாதவாரு பாதுகாப்பு அமசங்கள் கொடுக்கபட்டுள்ளது..

மெசேஜ்கான அம்சங்கள்(telegram message)

இந்த செயலில் இருக்கும் .சேவுட் மெசேஜ்(saved message option) மூலம் போட்டோஸ், வீடியோஸ், டெக்ஸ்ட் மெசேஜ் போன்றவைகளை சேமித்து வைத்து கொள்ள முடியும். பின்பு உங்களுக்கு தேவைபடும் போது அதனை பார்த்து கொள்ளவும் முடியும்.

மேலும் இதில் மற்றுமொரு சிறப்பு அம்சமாக உங்களால் குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப முன்பே தீர்மானிக்க முடியும். உதாரணத்துக்கு நீங்கள் உங்கள் நண்பருக்கு முதலாவதாக பிறந்த

நாள் வாழ்த்து தெரிவிக்க நினைத்தால் (scheduled) வசதியை பயன்படுத்தி சரியாக 12 மணிக்கு உங்கள் நண்பருக்கு வாழ்த்து தெரிவிக்க முடியும்..

Telegram: டெலிகிராமில் இத்தனை வசதிகள் நாம் உபயோகிக்கும் சோசியல் ஆப்களில் இல்லாத ஒரு புது விதமான அம்சத்தை டெலிகிராம் இதில் வழங்கியுள்ளது.

Exit mobile version