MoviesUpcoming

சினம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…

சினம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

அருண்விஜய் படத்தின் சினம் போஸ்டர் வெளியாகியுள்ளது
ArunVijay

சினம் படத்தின் போஸ்டரை நடிகர் அருண்விஜய் பிறந்தநாளுக்காக நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியீட்டு அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து உள்ளார்..

மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என அனைவரும் அருண்விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து.

சமூக வலைத்தளங்களில் #HBDArunVijay என்ற ஹஸ்டாக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு…

அருண்விஜய் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மாஃபியா சாப்டர் 1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதற்கு பிறகு வா டீல், அக்னி சிறகுகள், பாக்சர் போன்ற திரைபடங்கள் நடிகர் அருண்விஜய் கைவசம் உள்ளது.

இது போக இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் திரைப்படம் சினம். நடிகர் அருண் விஜய் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த குற்றம் 23 என்ற திரைபடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார்.

இத்திரைபடத்தில் மருத்துவ துறையில் நடக்கும் குற்ற செயல்கள் மற்றும் குற்ற பின்னணி குறித்த கதை அமசம் கொண்டதாக குற்றம் 23 படம் உருவாக்கப்ட்டிருக்கும்.

இத்திரைபடத்தை இயக்குனர் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கினார் படத்தில் அருண் விஜய், மஹிமா நம்பியார், வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

அதற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த மாஃபியா சாப்டர் 1 திரைபடத்தில் பிரசன்னா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்..

படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்தது ஜகேஷ் பெஜோய் இசைமையமைதிருந்தார். இந்த படத்தில் அருண்விஜய் சி‌பி‌ஐ அதிகாரியாக நடித்து இருப்பார்.

படத்தில் பிரசன்னா மற்றும் அருண்விஜய் இவர்களின் ஆக்ஷன் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கபட்டது.

மேலும் இவர் அம்மா கிரியேஷன்ஸ் டி,சிவா தயாரிப்பில் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடித்த அக்னி சிறகுகள் படத்தின் படபிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

சினம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…

இப்படத்தில் அருண்விஜய், விஜய் ஆண்டனி, பிரகாஷ்ராஜ், அக்சரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் நடராஜன் சங்கரன் படத்திற்கு இசையமைதிருக்கிறார்..

இந்த படத்தின் படபிடிப்பு முதல் கட்டமாக சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் படமாக்கபட்டது. மேலும் ரஸ்சியா, பீட்டர்ஸ்பர்க் மற்றும் கஜகஸ்தான் பகுதிகளில் படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்புகள் நிறைவடைந்தன.‌ இத்திரைபடத்தில் அக்ஷ்ரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக சினம் படத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக குப்பத்து ராஜா, சிக்சர் உள்ளிட்ட படங்களில் நடித்த ‘பாலக் லால்வனி’ நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர.

வாகா, ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஜி‌என்‌ஆர். குமரவேலன் இப்படத்தை இயக்குகிறார் படத்திற்கு சபீர் இசையமைக்கிறார்.

கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் திரைதுறைக்கு நிபந்தந்தனைகளுடன் கூடிய தளர்வுகளை அரசு வெளியிட்டது அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின.

அதற்கான புகைபடத்தை அருண்விஜய் தனது சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருந்தார். மேலும் படத்தின் வெளியீடு குறித்து தகவல் எதும் குறிபிடபடவில்லை.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !