MoviesUpcoming

சிபிராஜ் படத்தின் புதிய அப்டேட் வெளியானது

சிபிராஜ் படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியானது இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

சிபிராஜ் படத்தின் புதிய அப்டேட் வெளியானது
Actor Sibiraj

நடிகர் சிபிராஜ் பிறந்தநாளான இன்று திரை பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை அவருக்கு இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன் சிபிராஜ் நடித்து வரும் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்..

இந்த படத்திற்கு கபடதாரி என பெயரிடப்பட்டுள்ளது இந்த படம் கன்னடத்தில் வெளியான காவலுடாரி படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் கடந்த வருடம் நடிகர் சிவகுமார் திறந்து வைத்தார்.

கபடதாரி திரைப்படம் இந்த வருடம் (2020) மே மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக தியேட்டர்கள் கால வரையறையின்றி மூட பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி போடப்பட்டது.

பின்னர் தமிழக அரசு திரைத்துறை சார்ந்த் டப்பிங் பணிகளுக்கு விதிமுறைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியது அதன் பின்னர் இப்படத்தின் டப்பிங் பணிகளும் நடைபெற துவங்கியது.

சிபிராஜ் படத்தின் புதிய அப்டேட் வெளியானது

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு திரைத்துறையில் டப்பிங் பணிகளுக்கு என தனி கட்டுபாடுகளுடன் கூடிய தளர்வுகளை வெளியிட்டது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி டப்பிங் பணியை மேற்கொண்ட முதல் படம் நடிகர் சிபிராஜ் நடிக்கும் கபடதாரி.

வித்யாபிரதீப் நடிக்கும் படத்தின் போஸ்டர்

இப்படத்தில் நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இந்த படத்தில் நாசர் தனது சம்பளத்தில் 15% குறைத்து கொண்டதகாவும் படத்தின் டப்பிங் முடிந்ததாகவும் கபடதாரி படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நாசருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார்..

இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கபடதாரி படத்தின் இயக்குனராக முதன் முறையாக அறிமுகம் ஆகிறார்..

இப்படம் கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்ததனால் மே மாதம் திரைக்கு கொண்டு வர முடியாமல் போனது இதனால் 200 நாட்கள் தாமதமாகி படத்தின் தயாரிப்பாளருக்கு கிட்டதட்ட 1 கோடிரூபாய் வரை செலவுகள் ஆனதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிபிராஜ் ரங்கா , வட்டம் உள்ளிட்ட படத்திற்கு பிறகு நடிக்கும் திரைப்படம் கபடதாரி இப்படத்தின் போஸ்டரில் சிபிராஜ் ட்ராஃபிக் போலீஸ் சீருடையில் கையில் துப்பாக்கி மற்றும் வாக்கிடாக்கியுடன் இருப்பது போன்று அமைந்துள்ளது மேலும் போஸ்டரில் ஆர்டிகில் 352 எனவும் குறிபிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கபடதாரி படத்தில் நடிகர் சிபிராஜ், நடிகை நந்திதா ஸ்வேதா, நாசர் மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்திற்கு சைமன் கே.கிங் இசையமைக்கிறார்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார் படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார் மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ராசாமதி மற்றும் எடிட்டர் பிரவீன் கே.எல்..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் திரை அரங்குகள் அனைத்தும் மூடபட்டுள்ளதால் ரிலீஸ்க்கு தயாராக இருந்த திரைபடங்கள் அனைத்தும் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிபிராஜ் நடிக்கும் கபடதாரி திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது தியேட்டரில் வெளியாகுமா என்பதை பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை குறிப்பிடபடவில்லை.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !