MoviesUpcoming

பிக்பாஸ் ‘ரைசா’ நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியானது…

பிக்பாஸ் ரைசா நடிக்கும் படத்தின் ‘தி சேஸ்’ என பெயரிடப்பட்டு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் 'ரைசா' நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியானது...
Raiza willson

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ரைசா வில்சன் மிகவும் பிரபலம் அடைந்தார்.

மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் முதன் முறையாக விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் சீசன் ஒளிபரப்பபட்டது.

இதில் நடிகை ஓவியா, பரணி, ரைசா வில்சன், சக்தி, கஞ்சா கருப்பு, சினேகன், காயத்ரி ரகுராம், ஹரீஷ் கல்யாண், ஆராவ், ஜூலி, நமீதா, ஆர்த்தி, அனுயா, பிந்து மாதவி, காஜல் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த முதல் சீசன் பிக்பாஸ் தமிழில் நடிகர் ஆராவ் வெற்றி பெற்றார். ஆனால் முதல் சீசனை பொறுத்தவரை நடிகை ஓவியா மிகவும் பிரபலமானார்.. இவரின் தோழியாக பிக்பாஸ் ஹவுசில் இணைந்து வலம் வந்தவர் நடிகை ரைசா வில்சன்.

நடிகை ரைசா இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே நான்கு பரிட்சயம் ஆனார். இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது பின்னர் பிக்பாஸ் ஹவுசிலிருந்து வெளிய வந்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகளும் வார தொட்ங்கியது.

இவர் பிக்பாசில் கலந்து கொள்வதற்கு முன் மாடலாக இருந்து விள்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். ரைசா இதற்கு முன் தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி-2 படத்தில் ‘கஜோல்’ உதவியாளராக நடித்து இருப்பார்.

பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் ரைசா ஹீரோயினாக நடித்த முதல் படம் பியார் பிரேம காதல் படத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தில் ரைசாவுக்கு ஜோடியாக நடித்த ஹரிஷ் கல்யாணும் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஆவார்..

இதை தொடர்ந்து அவர் ஆலிஸ் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கி வரும் ‘சூர்ப்பனகை’ திரைபடத்தில் ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இப்படம் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு என்பதால் படத்தின் படபிடிப்பு நிறுத்தபட்டுள்ளது இது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது..

பிக்பாஸ் ‘ரைசா’ நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியானது…

மேலும் இயக்குனர் கார்த்திக் ராஜு கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்த பேர் கொண்ட படக்குழுவினருடன் ‘தி சேஸ்’ படத்தை இயக்க கதை எழுதியுள்ளார்.

இப்படத்தில் ரைசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் மேலும் இவருடன் பால சரவணன், ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் இது தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.

இப்படத்தின் மொத்த படபிடிப்பும் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இப்படத்திற்கு சாம் சி .எஸ்., இசையமைத்துள்ளார், ராஜ் சேகர் வர்மா படத்தை தயாரித்து உள்ளார்.

இப்படமானது ஒரே இரவில் நிகழும் கதை என்பதால் தமிழ், தெலுங்கு, மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

பிக்பாஸ் ‘ரைசா’ நடிக்கும் படத்தின் படபிடிப்புக்கு முன்னும் ,பின்பும் படகுளுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !