MoviesUpcoming

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் கோடியில் ஒருவன்…

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் கோடியில் ஒருவன்
Vijay antany

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘வேட்டைக்காரன்’ நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ உள்ளிட்ட பல திரைபடங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் இசையமைத்த படங்களில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்கள் வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்றது.

பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் களம் இறங்கினார் அவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக ‘நான்’ திரைபடத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். முதல் திரைபடமே அவருக்கு ஒரு நல்ல வெற்றி திரைபடமாக மாறியது.

இந்த படத்தை இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கினார்.படத்தில் விஜய் ஆண்டனி, சித்தார்த் வேணுகோபால், அனுயா, ரூபா மஞ்சரி, விபா நடராஜன் ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்திற்க்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து இருந்தார்.

அந்த வெற்றியை தொடர்ந்து நான் திரைபடத்தின் பாகம் 2 உருவானது அப்படதிற்கு சலிம் என்ற தலைப்புடன் திரைப்படம் வெளியானது..

மேலும் இதை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் ‘பிச்சைக்காரன்’ திரைபடத்தில் நடித்தார் அப்படம் அவருக்கு மிக பெரிய வெற்றியை தேடிதந்தது.

இத்திரைபடம் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய திருப்பு முனையாகவே அமைந்தது.

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கொலைகாரன்’ இப்படத்தில் முதன் முறையாக அர்ஜூன், விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து இருப்பார்.

வித்யாபிரதீப் நடிக்கும் படத்தின் போஸ்டர்.

மேலும் இப்படத்தில் நாசர், ஆஷிமா நர்வாள், சீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் கோடியில் ஒருவன்…

தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் 14-வது திரைபடத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘கோடியில் ஒருவன்’ என பெயரிடப்பட்டுள்ளது இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்..

அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் விஜய் ஆண்டனி ஒரு கட்டிடத்தின் மேல் அமர்ந்து இருப்பது போலவும் அந்த கட்டிடத்தில் இங்கு டியூஷன் எடுக்கபடும் என்ற வாசகமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

விஜய் ஆண்டனி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைபடத்தை பதிவிட்டு கெஸ் தி டைட்டில் என்று பதிவிட்டு இருந்தார்.

அதனை, கவனித்த ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர் அந்த போஸ்டர் விஜய் ஆண்டனி நடிக்கும் தனது 14-வது படத்தின் டைட்டில் சூசகமாக ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார்.

‘கோடியில் ஒருவன் ‘ திரைபடத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மீகா நடிக்கிறார் படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்குகிறார் இவர் ஏற்கனவே ‘மெட்ரோ’ ,ஆள் படங்களை இயக்கியவர் ஆவார்.

டிடி. ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்..

கோடியில் ஒருவன் திரைப்படம் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 2021 கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வரும் என கூறபடுகின்றன.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !