laththi trailer : லத்தி ஸ்பெஷலிஸ்டாக களமிறங்கிய விஷால்

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் லத்தி ஸ்பெஷலிஸ்ட்டாக கலக்கி இருக்கும் லத்தி படத்தின் டிரைலர் வெளியானது..

laththi tamil movie
vishal

எனிமி, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் லத்தி. இத்திரைபடத்தினை ராணா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது புது முக இயக்குனர் ஏ.வினோத் குமார் லத்தி படத்தினை இயக்குகிறார்..

இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாக சுனைனா களமிறங்கியிருக்கிறார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு நடித்துள்ளார்..

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் லத்தி படத்தின் டீசர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது..

தற்போது, லத்தி படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது விஷால் நேர்மையான கான்ஸ்டபலாகவும், லத்தி ஸ்பெஷலிஸ்ட்டாகவும் நடித்திருக்கிறார்..

காவல் துறையில் கான்ஸ்டபல் முருகானந்தமாக விஷால் நடிக்கும் லத்தி திரைப்படம் காதல், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக தயாராகி உள்ளது..\

இத்திரைபடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் வெளியாக இருக்கிறது..

வரும் 2022 கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது விஷாலின் லத்தி திரைப்படம்..

கீழே லத்தி திரைபடத்தின் டிரைலர் கொடுக்கபட்டுள்ளது கண்டு கழியுங்கள்.

Exit mobile version