MoviesUpcoming

SK21: திரைபடத்தில் இணைந்த சாய்பல்லவி

SK21: திரைபடத்தில் இணைந்த சாய் பல்லவி இணையத்தில் தீயாய் பரவும் புகைபடங்கள்…

SK21: திரைபடத்தில் இணைந்த சாய்பல்லவி
Sivakarthikeyan & Sai pallavi

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி எழுதி இயக்கி இருக்கும் DON திரைபடத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ்‌.ஜே. சூர்யா, சமுத்திரகணி, சூரி, பால சரவணன்,

மனோ பாலா, ராதா ரவி, முனிஷ் காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இத்திரைபடம் வரும் மே 13 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது..

சமீபத்தில் சென்னையில் DON படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் DON திரைப்பட குழுவினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..

அப்போது வெளியிடபட்ட DON படத்தின் டிரைலர் இதுவரை இணையத்தில் 9.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மேலும் டான் படத்திலிருந்து இதுவரையில் Jalabulajangu, Bae, private party என மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 21-வது படத்தினை உலகநாயகன் கமல்ஹாசனின் Rajkamal films international என்ற தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயன் படத்தினை தயாரிக்கவுள்ளதாக புகைபடங்களுடன் கூடிய அதிகார்பூர்வமான அறிவிப்புகள் வெளியானது..

சிவகார்த்திகேயன் நடிக்கும் 21-வது படத்தை Rangoon படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தினை எழுதி இயக்குகிறார்..

இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிகை சாய் பல்லவி முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு அதிகார்பூர்வமாக SK21 படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது..

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சாய் பல்லவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதை வெளியிட்டுள்ளது ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்..

மேலும், இதனுடன் உலகநாயகன் கமல்ஹாசன், SK21 படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகை சாய் பல்லவி ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளனர் படக்குழுவினர்…

சிவகார்த்திகேயனின் DON படத்தை திரையில் காண எதிர்ப்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது வெளியாகி இருக்கும் SK21 படத்தின் புதிய அப்டேட் ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !