Chiyaan 60 : டைட்டில் & ஃபஸ்ட் லுக் வெளியானது

Chiyaan 60 : டைட்டில் & ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று அட்டகாசமாக வெளியிட்டது படக்குழு..

Chiyaan 60 : டைட்டில் & ஃபஸ்ட் லுக் வெளியானது
Chiyaan Vikram

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 60 வது திரைபடத்தை நடிக்கிறார். இது நடிகர் விக்ரமிற்க்கு 60 வது படம் என்பதால் படத்திற்க்கு chiyaan 60 என்ற தலைப்புடன் படத்தின் படபிடிப்பு வேலைகள் தொடங்கின.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் டார்ஜிலிங் பகுதிகளில் பாடமாக்கபட்டுள்ளது. மேலும் இதன் இறுதி கட்ட படபிடிப்புகளை நேபாள எல்லை பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.

விக்ரம் 60 படத்தில் முதன் முறையாக விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார்.

துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்..

முதல் படமே அவருக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது தன் அப்பாவுடன் முதல் முறை நடிப்பதால் இப்படத்தின் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது.

இத்திரைபடத்தில் விக்ரம் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளதாக. ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் இப்படத்தில் தான் முதலாவதாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.

படத்தில் விக்ரமின் புதிய தோற்றம் அவரது ரசிகர்களை பெரிதும் ஈர்த்து விட்டது என்றே சொல்லலாம். அவ்வ போது chiyaan 60 படத்தின் புகைபடங்கள் வெளிவரும் போது எல்லாம் ரசிகர்கள் அதனை இணையத்தில் பெரும் அளவு பகிருந்து வந்தனர்.

Chiyaan 60 : டைட்டில் & ஃபஸ்ட் லுக்

இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு இன்று வெளியிடபடும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் நேற்று

chiyaan 60 படத்தின் பஸ்ட் லுக் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடபடும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அதன் படி, இன்று மாலை சரியாக 6.30 மணிக்கு படத்தின் தலைப்பு உடன் அடங்கிய பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது சியான் 60 படக்குழு.

இதனுடன் சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் தலைப்பிற்க்கு ஒரு சிறிய மோஷன் போஸ்டரையும் உடன் வெளியிட்டுள்ளனர்.

chiyaan 60 First Look

இந்த படத்திற்க்கு மகான் (mahaan) என பெயரிடபட்டுள்ளது. படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்கா, வாணி போஜன், சிம்ரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

மகான் திரைபடத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசையமைதுள்ளார். மகான் படத்தை எஸ் எஸ். லலித் குமார் தயாரித்துள்ளார்..

மகான் படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் மாலை 6.30 மணிக்கு இணையத்தில் வெளியானதும்.

ரசிகர்கள் இணையத்தில் mahaan, dhruv vikram, vikram 60, போன்ற ஹஸ்டாக்களை உருவாக்கி பெருமளவு பகிரபட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் யுட்யூப் தளத்தில் வெளியான சிறிது நேரத்திலே நான்கு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் 80 ஆயிரம் லைக்களையும் அவை பெற்றுள்ளது..

இதை அடுத்து இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் இடையே இன்னும் சற்று அதிகம் உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.

Exit mobile version