MoviesUpcoming

க/பெ.ரணசிங்கம் படத்திற்கு யு சான்றிதழல்…

க/பெ.ரணசிங்கம் படத்திற்கு யு சான்றிதழல் விஜய்சேதுபதி நடிக்கும் க/பெ. ரணசிங்கத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழலை வழங்கியுள்ளது. இப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி ஓடிடி யில் வெளிவர இருக்கிறது.

க/பெ.ரணசிங்கம் படத்திற்கு யு சான்றிதழல்
ka/pe ranasingam poster

க/பெ.ரணசிங்கம் படத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே ரம்மி, தர்மதுறை போன்ற படங்களில் இணைந்து நடித்தனர் தற்போது இவர்கள் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் க/பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் இணைந்திருக்கிறது.

க/பெ ரணசிங்கம் விவரம்

க/பெ.ரணசிங்கம் படத்தின் டிரைலர் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது பின்னர் படத்தின் பாடல்களை படகுலு வெளியிட்டது.

இப்படத்தின் டிரைலரில் விஜய் சேதுபதி மக்கள் பிரச்சனைக்காக குரல் குடுக்கும் நபராக வருகிறார். படத்தின் டிரைலர் வெளிவந்த பிறகு இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை உருவாக்கி உள்ளது.

பி.விருமாண்டி இப்படத்தை இயக்குகிறார் இவர் ஏற்கனவே மத யானை கூட்டம் படத்தை இயக்கியவர் ஆவார். க/பெ.ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் இவருடன் விஜய் சேதுபதி,சமுத்திர கனி, யோகி பாபு,பூ ராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் ஒளிப்பதிவு என்.கே.ஏகாபரம்,படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடபட்டு இருப்பதால் இப்படம் ஓடிடி யில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்தன அதனை படகுலு தொடர்ந்து மருத்து வந்தது.

ஓடிடி தளம்

திரை அரங்குகள் மூடபட்டு இருக்கும் காரணத்தால் ரிலீஸ்க்கு தயாராக இருந்த தமிழ் படங்கள் அனைத்தும் அப்படியே நின்று விட்டது.

இதனால் தமிழ் சினிமா துறையில் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகி தவித்து வந்தனர். இதனை சமாளிக்கும் வகையில் தற்காலிகமாக திரைபடங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யபட்டது.

ஆகையால் தியேட்டர்கள் திறக்கும் வரை சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடியில் வெளியிட அந்தந்த படத்தை சார்ந்ததயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.

அதன் படி ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் குயின் போன்ற திரைபடங்கள் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாயின..

க/பெ.ரணசிங்கம் படத்திற்கு யு சான்றிதழல்…

இதை தொடர்ந்து க/பெ.ரணசிங்கம் படமும் ஓடிடியில் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் என படகுலு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

விஜய் சேதுபதியின் ரோல்

இப்படத்தில் விஜய் சேதுபதி சிறிய நேரம் மட்டுமே வருவார் என தெரிகிறது பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவரை படம் முழுக்க திரையில் காணலாம்.

க/பெ.ரணசிங்கம் படத்தில் தண்ணி காத்து, அழகிய சிறுக்கி போன்ற பாடல்கள் வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளது..

இப்படத்தில் இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் தங்கை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தை பற்றி கூறுகையில் இப்படம் நயன்தாராவின் அசத்தலான நடிப்பில் வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்ற அறம் படத்தை போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார் இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடி இருக்கிறது

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !