MoviesUpcoming

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் இணைந்த நடிகை?…

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் இணைந்த நடிகை? யார் தெரியுமா…

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் இணைந்த நடிகை?
Sivakarthikeyan

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திற்கும் திரைப்படம் டாக்டர். இத்திரைபடத்தில் சிவகார்திகேயனுடன் ப்ரியங்கா அருள் மோகன் என்பவர் நடித்து இருக்கிறார் மேலும் இப்படத்தில் வினய் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

இத்திரைபடத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் தனது டப்பிங் பணிகள் நிவடைந்துவிட்டது என டப்பிங் அறையில்இருக்கும் தனது புகைபடத்தை எடுத்து வெளியிட்டார் அத்துடன் டாக்டர் படக்குழுவிற்கு தனது நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்த இருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது..

வரும் மார்ச் மாதம் 26-ஆம் தேதி டாக்டர் திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் என தெரிவித்தனர். இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்

இதனை அடுத்து அவருடைய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் doctor என்ற ஹாஸ்டகே உருவாக்கி இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இப்படத்தின் செல்லமா எனும் பாடல் இணையத்தில் வெளியாகி இதுவரை 92 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி பாடியுள்ளனர்.

இணையத்தில் வெளியாகியிருக்கும் செல்லம்மா லிரிகள் வீடியோவில் இயக்குனர் நெல்சன் திலீப் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஜோனிடா காந்தி பாடுவதும், இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பது போன்றும் ஒரு கலக்கலான வீடியோ பாடலாக படக்குழு யுட்யூப் தளத்தில் பாடலை வெளியிட்டுள்ளது..

இதை தொடர்ந்து படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பெருகி வருகிறது. இப்படத்தினை தியேட்டரில் காண்பதிற்க்கு ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

(sivakarthikeyan movies) டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைபடமும் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஆர். ரவிகுமார் இயக்குகிறார்.

படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி பாபு, கருணாகரன், பானு ப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு முதன் முறையாக இசைபுயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது..

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் இணைந்த நடிகை?…

இதை தொடர்ந்து சிவகார்திகேயன் நடிக்கும் 19-வது படத்திற்கு DON என பெயரிடபட்டுள்ளது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் இணைந்த நடிகை? டாக்டர் படத்தில் நடித்த ப்ரியங்கா அருள் மோகன் இந்த படத்திலும் நடிக்க மீண்டும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதனை சிவகார்த்திகேயன் வெல்கம் பேக் மேடம் என அவரை வரவேர்த்துள்ளார்.

மேலும் இப்படத்தில் சமுதிரக்கணி, எஸ்.ஜே. சூர்யா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தை சிபி சக்ரவர்தி இயக்குகிறார் இசையமைபாளர் அனிருத் இசையமைக்கிறார் இந்த படத்தின் படபிடிப்புகள் முதற்கட்டமாக கோயம்புத்தூரில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !