கையில் உலக உருண்டையுடன் சமாதான புறாவை பறக்கவிட்ட சிவகார்த்திகேயன்

கையில் உலக உருண்டையுடன் சமாதான புறாவை பறக்கவிடும் சிவகார்த்திகேயன் SK20 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..

கையில் உலக உருண்டையுடன் சமாதான புறாவை பறக்கவிட்ட சிவகார்த்திகேயன்
SIvakarthikeyan

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு,

சிவகார்த்திகேயன் நடித்து வரும் sk20 படத்திற்க்கு Prince என தலைப்பிடபட்டு அதன் பஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு..

sk20 திரைபடத்தின் புதிய அப்டேட்கள் மற்றும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகும் என முன்னரே படக்குழுவினர்

அறிவித்தபடி சிவகார்த்திகேயன் நடிக்கும் 20-வது படத்தின் முதல் பார்வை இன்று மாலை 6.00 மணிக்கு வெளியானது..

தயாரிப்பாளர்கள் சுனில் நரங், டி. சுரேஷ் பாபு, புஷ்குர் ராம் மோகன் ராவ் மற்றும் இணை தயாரிப்பாளராக அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து தயாரிக்கும்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார் இயக்குனர் அனுதீப் கே.வி எழுதி இயக்குகிறார்..

மேலும், இப்படத்தில் எடிட்டர் பிரவீன் கே.எல், ஒளிபதிவாளர் மனோஜ் பரமஹம்சா, ஆர்ட் டைரக்டர் நாராயண ரெட்டி, ஸ்டண்ட் தினேஷ் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்…

prince முதல் பார்வை போஸ்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் சிரித்த முகத்துடன் தன் கையில் உலக உருண்டையுடன் சமாதான தூதாக கருதபடும் வெள்ளை புறாவுடன், வெள்ளை சட்டையுடன் தோற்றமளிக்கிறார் சிவகார்த்திகேயன்..

மேலும், இந்த போஸ்டரின் பின் புறத்தில் வெண்மை நிறத்தில் உலக வரைபடத்தை காண முடிகிறது. இதனுடன் போஸ்டரில் சிவகார்த்திகேயனை சுற்றி பல கைகள் உயர்த்தியபடி காணபடுகிறது.

அவ்வாறு உயர்த்தியபடி இருக்கும் கைகளில் பல நாட்டு தேசிய கொடிகளை அந்த கைகள் தாங்கிபிடிக்கும் படி போஸ்டர் வெளியாகியுள்ளது..

prince படத்தின் சப் டைட்டிலில் கணியன் பூங்குன்றனார் எழுதிய புகழ்பெற்ற பாடலின் முதல் வரியின் முதல் எழுத்தான “யாதும் ஊரே” என்ற வார்த்தையை ஆச்சர்ய குறியுடன் முடித்து படத்தின் சப் டைட்டிலாக பயன்படுத்தபட்டுள்ளது..

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் சிவகார்த்திகேயன் நடிக்கும் prince திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருப்பது குறிபிடத்தக்கது.

Exit mobile version