நான்கு இயக்குனர்கள் நான்கு விதமான கதை அம்சம்…

நான்கு இயக்குனர்கள் நான்கு விதமான கதை அம்சங்கள் கொண்ட குட்டி ஸ்டோரி படத்தின் டீசர் வெளியானது.

நான்கு இயக்குனர்கள் நான்கு விதமான கதை அம்சம்
vijay sethupathi & amala paul

தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே தற்போது அந்தலோஜி திரைபடங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கு முன் தமிழில் அந்தலோஜி(anthology) படங்களான சில்லு கருப்பட்டி(sillu karuppatti), புத்தம் புது காலை ஆகிய படங்கள் வெளிவந்து சினிமா ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த வருடம் 2019 டிசம்பர் மாதம் வெளியான சில்லு கருப்பட்டி நான்கு விதமான கதை அம்சதுடன் வெளியானது.

அதில் சமுத்திரகனி, சுனைனா, சாரா அர்ஜூன் நிவேதித்தா சதீஷ் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

இதனை ஹலிதா ஷமீம் இயக்கினார் வெங்கடேஷ் வெளினெனி தயாரித்து இருந்தார். படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்து இருந்தார்.

இதை தொடர்ந்து தமிழில் வெளியான மற்றுமொரு ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை வெளியானது. இது கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

புத்தம் புது காலை(putham puthu kaalai) படத்தில் 5 கதைகள் இடம் பெற்று இருந்தன இதனை 5 இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். அவைகள்

இளமை இதோ இதோ கதையை சுதா கொங்கரா இயக்கினார் இதில் ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ் ஜெயராம், மாதவன், கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் ஜீ.வி. பிரகாஷ் இசையமைதிருந்தார்.

அவரும் நானும் – அவளும் நானும் கதையை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார். இதில் .எம். எஸ். பாஸ்கர், ரிட்டு வர்மா உள்ளிட்டோர் நடித்தனர்.

ஸ்ருதி ஹாசன் நடித்த காஃபி எனிஒன் கதையை சுஹாசினி மணிரத்னம் இயக்கினார். ராஜிவ் மேனன் இயக்கிய ரீயூனியன் கதையில் ஆன்ட்ரியா நடித்தார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பாபி சிம்ஹாவை வைத்து மிராகல் கதையை இயக்கினார்.

இப்படமானது 2020 அக்டோபர் மாதம் அமசான் பிரைமீல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி நடித்திற்க்கும் ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது..

நான்கு இயக்குனர்கள் நான்கு விதமான கதை அம்சம்…

காதலை மையபடுத்தி எடுக்கபட்டுள்ள இந்த நான்கு விதமான கதைகளில் விஜய் சேதுபதி, அமலா பால், மேகாஆகாஷ், அதித்தி பாலன், வருண், சாக்ஷி அகர்வால், உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

நான்கு இயக்குனர்கள் மற்றும் நான்கு விதமான கதை அம்சம் கொண்ட (kutti story)குட்டி ஸ்டோரி படத்தை இயக்கும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி மற்றும் விஜய் உள்ளிட்ட இயக்குனர்கள் படத்தை இயக்கி உள்ளனர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து உள்ளார்.

இப்படம் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து குட்டி ஸ்டோரி படத்தின் முதல் ஸிநீக் பீக் இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தில் வெளியாகி இருக்கும் குட்டி ஸ்டோரி படத்தின் முதல் ஸினீக் பீக்கில் நடிகர் விஜய் சேதுபதிக்கு செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. அவர் அதனை பேசுவதற்காக தனியாக மாடிக்கு செல்கிறார். மறுமுனையில் அவரிடம் செல்போனில் பேசும் நபர் நடிகை அதிதி பலன் என காட்டபடுகிறது.

Exit mobile version