பிச்சைக்காரன்-2 படத்தின் போஸ்டரை விஜய் ஆண்டனி பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.
கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தில் வெளிநாட்டில் படித்து விட்டு தாயகம் திரும்பி வருகிறார் படத்தின் நாயகன் அருள். தன்னுடைய சொந்த ஊரில் தொழிற்சாலை நடத்தி வருகிறார் கதாநாயகனின் தாயார்.
தன் தாயின் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்ட கதாநாயகன் அருள், இனி வரும் காலத்தில் தன் தாயை கவனித்து கொள்ள நினைக்கிறார்.
இந்த நிலையில் தொழிசாலையில் வேலையாட்கள் செய்யும் வேலைகளை மேற்பார்வை கொண்டுள்ள போது திடீரென எதிர்பாரா விதமாக தவறி விழுந்ததில் பின்னந்தலையில் அடிபட்டு விடுகிறது நாயகனின் தாயாருக்கு.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபடுகிறார். அங்கு மருத்துவர்கள் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பிழைப்பது கடினம் என்று கூறி விடுகிறார்கள்.
இதனை அடுத்து கதாநாயகன் விஜய் ஆண்டனி செய்வது அறியாது கண் கலங்கி நிற்கிறார். பின் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டு தன் தாயின் உயிரை காப்பாற்ற பிரார்த்திக்கிறார்.
அப்போது அங்கு வந்த ஒரு சாமியார் உன்னிடம் பேச வேண்டும் என்னுடன் வா என்று கதாநாயகனை அவருடைய இடத்திற்க்கு அழைத்து செல்கிறார்.
அப்போது அந்த சாமியார் நாயகன் அருளிடம் நீ உன் தாயை காப்பாற்ற வேண்டும் என்றாள் 48 நாட்கள் நீ பெரும் பணக்காரன் என்ற அடையாளத்தை விட்டுவிட்டு, மற்றவர்களுக்கு நீ யார் என்பதை மறைத்து 48 நாட்கள் (1 மண்டலம் ) நீ கை ஏந்தி பிச்சை எடுக்க வேண்டும் என்று சாமியார் சொல்கிறார்.
இதனை ஏற்று தன் அடையாளத்தை மறைத்து பிச்சை எடுப்பதற்காக தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறுகிறார் நாயகன்..
இதற்க்கு பின் நாயகன் பிச்சை எடுக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள், இன்னல்கள் சமாளித்து சாமியார் சொன்னது போல 48 நாட்கள் தன் அடையாளத்தை மறைத்து பிச்சை எடுத்து தன் தாயின் உயிரை காப்பாற்றுகிறாரா என்பதை பற்றி சொல்லும் படம்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, சாட்னா டைட்டஸ் ,தீபா ராமானுஜம், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்து வெளி வந்தது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

பிச்சைக்காரன்-2 படத்தின் போஸ்டர் வெளியானது
இதனை அடுத்து பிச்சைக்காரன்-2 படத்தின் கதை, திரைக்கதையை கொரோனா ஊரடங்கு காலத்தில் விஜய் ஆண்டனியே எழுதியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளராக தேனீ ஈஸ்வர் பணிபுரிகிறார் மேலும் இப்படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் பற்றிய தகவல்கள் இனி தான் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.
பிச்சைக்காரன்-2 படத்தை கடந்தாண்டு வெளியான பாரம் படத்துக்காக தேசிய விருது பெற்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார் இப்படம் 2021-ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
பிச்சைக்காரன் படத்தின் மூலம் விஜய் ஆண்டனி-க்கு முன்னணி நாயகன் என்ற அந்தஸ்து கிடைத்தது எனவே இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.